வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? 10 நிமிடத்தில் அத போக்க இதோ ஓர் வழி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

உங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? 10 நிமிடத்தில் அத போக்க இதோ ஓர் வழி!



உதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால் உதடுகளின் அழகை இயற்கையாகவே அதிகரிக்கலாம்.

பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன. இங்கு உதடுகளில் உள்ள கருமையைப் போக்கி, உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

ஸ்கரப் செய்ய தேவையான பொருட்கள்: 
எலுமிச்சை சாறு - 1 கப்
 சர்க்கரை - சிறிது

தயாரிக்கும் முறை:
 எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
 
எவ்வளவு நாட்கள் செய்ய வேண்டும்?
 இந்த செயலை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், 5-6 நாட்களிலேயே உதடுகளில் உள்ள கருமை நீங்கி, உதடுகள் மென்மையாகவும், அழகாகவும் இருப்பதைக் காணலாம்.



இதர வழிகள்...
 டிப்ஸ் #1
 கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி, உதடுகளின் அழகு அதிகரிக்கும்.
டிப்ஸ் #2 
பீட்ரூட்டை துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியான அந்த பீட்ரூட் துண்டுகளைக் கொண்டு உதடுகளை 2 நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தாலும், உதடுகளில் உள்ள கருமை அகலும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment