பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை
சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் துணை புரியும்.
அதிக வலி, தசைப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணமாகவும் அமையும். முளைகட்டிய தானியங்கள், கீரை, வெல்லம், பழங்கள், நட்ஸ்கள், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். சமையலில் மஞ்சள் பொடி, இஞ்சி, சீரகம், லவங்கப்பட்டை போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒருசில வகை உணவுகளை மாத விடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியதும் அவசியம். காபி பிரியர்கள் அதனை தவிர்ப்பது அவசியமானது. அது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும். அதனால் இதயத்துடிப்பும் அதிகரிக்கும். வீண் டென்ஷன், கவலை போன்ற பாதிப்புகள் உருவாக்கும். காபிக்கு பதிலாக கிரீன் டீ, தக்காளி, கேரட் ஜூஸ் அல்லது சூப் பருகலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பன்றி இறைச்சி, ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறி சாலட், கஞ்சி போன்றவற்றை சாப்பிடலாம். வெளி உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. (தொடர்ச்சி கீழே...)
கொழுப்பு நிறைந்த உணவுகள், பர்கர்கள், கிரீம் சார்ந்த இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் நாட்களில் தவறான உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக கோதுமை ரொட்டி, சால்மன் மீன்கள், பருப்பு குழம்பு வகைகளை சாப்பிடலாம். பால், பாலாடை கட்டி போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மோர் பருகலாம்.
நொறுக்கு தீனிகள், பிஸ்கட், சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றில் கொழுப்பு அதிகமாக இருக்கும். அவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தி மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு பதிலாக கேரட், வெள்ளரிக்காய்கள் சாப்பிடலாம். ரொட்டி, பீட்சா போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். செரிமான செயல்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட பவுடர்களில் தயாராகும் சூப்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவற்றுள் உப்பு அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக தயிரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே !!!
|

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு...
-
கோவையை சேர்ந்த கல்லூரி நிர்வாகி அங்கு பணிபுரியும் இளம் பெண்களுடன் கூத்தடிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
பல விதமான அசாதாரணமான குழந்தை பிறப்புக்கள் உலகில் பல இடங்களில் நடந்துள்ளன . அவற்றைப் பற்றி கேள்விப்படும் பொழுது வியப்பானத...
-
தே னி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய 11 வயது மகள் ராகவி. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டா...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்ப..
No comments:
Post a Comment