மற்ற உணவுகளையும் விட அதிக அளவில்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்ற முட்டை அதிகமாக சாப்பிட்டால், உடலின்
வெப்பநிலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் பெரியவர்கள்
வெயில்காலத்தில் முட்டை சாப்பிட்டால், அவர்கள் தங்களுடைய உடலை சமாளித்துக்
கொள்ள முடியும். குழந்தைகள் சாப்பிடும்போது உடல் நலக்கோளாறுகள் உண்டாகும்.
அவற்றை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் தான், தாய்மார்கள்
குழந்தைகளுக்கு வெயில்காலத்தில் முட்டை கொடுக்க தயங்குகிறார்கள்.
முட்டையில் எவ்வளவு புரதம் இருக்கிறதோ
அதேபோல, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி மிக அதிக அளவில்
நிறைந்திருக்கிறது. அவை எலும்புகளை மிக உறுதியாக வைத்திருக்கவும் எலும்பு
வளர்சியில் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
வைட்டமின், புரோட்டீன் மட்டுமல்லாமல்
மினரல்கள், கால்சியம், பாஸ்பரஸ், ஜிங்க், அயோடின், மிக அதிக அளவிலாக
ஃபேட்டி ஆசிட், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புரதத்தை நிறைவு செய்வதற்கான முட்டைக்கு
பதிலாக மாற்று உணவுக்கு வெயில்காலத்தில் முன்னுரிமை வழங்குகிறார்கள்.
ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள், என்ன
சொல்கிறார்கள் என்றால், முட்டை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் தான்.
ஆனால், குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பதை கோடை காலத்தில் முற்றிலும்
தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் முட்டை ஒரு நாளின் ஊட்டச்சத்து
தேவையில், பெரும்பான்மையை நிறைவு செய்யும். அதனால் தாராளமாக ஒரு நாளைக்கு
இரண்டு முட்டைகள் வீதம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படலாம் என்றே ஊட்டச்சத்து
நிபுணர்களும் மருத்துவர்களும் குறிப்பிடுகிறார்கள்.
Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு...
-
தே னி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய 11 வயது மகள் ராகவி. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டா...
-
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்ப...
-
ஒருவர் 20 முதல் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால் அவருக்கு பத்தாண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்...
-
ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட்டாக இளைஞரை கிணற்றில் தள்ள, நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். மறுநாள் அவரது செ...
-
அட, பாவி மனுஷா… உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..! எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாத...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கூலி தொழிலாளியின் மகளுக்கு வியர்வையாக ரத்தும் வெளியேறுவதால் பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்த...
-
சூரத் குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், தன் நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு, 'மெர...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
தினம் ஒரு நாலடியார் பாடல் - 3. யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினை உலப்ப வேறாகி..
No comments:
Post a Comment