வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Oh My God எஞ்சினில் கோளாறு.. தெரியாமல் புறப்பட்ட விமானம்.. திருச்சியில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸால் பரபரப்பு!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 17, 2018

Oh My God எஞ்சினில் கோளாறு.. தெரியாமல் புறப்பட்ட விமானம்.. திருச்சியில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸால் பரபரப்பு!



திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பிரச்சனை காரணமாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் சமீப காலமாக சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

 கடந்த வாரம் துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மீது இடித்தது. அதற்கு மறுநாள் ஜெட்ஏர்வேஸ் விமானம் ஏசி கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீண்டும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!
என்ன பாதிப்பு
 இன்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த பிரச்சனை உருவாகி உள்ளது. ஒரு என்ஜின் மட்டும் வேலை செய்யாமல் போய் இருக்கிறது.


கடைசியில் கண்டுபிடித்தார் 
 ஆனால் இதை விமானி விமானம் எடுக்கப்படும் வரை கண்டுபிடிக்கவில்லை. கடைசி நேரத்தில் விமானம் புறப்பட்ட பின்தான் கண்டுபிடித்துள்ளார். அந்த விமானத்தில் 118 பயணிகள் இருந்துள்ளனர். ஆனால் விமானம் புறப்பட்ட பின்தான் அதில் இருந்து பிரச்சனையை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


அவசரமாக தரையிறக்கினார்
 இந்த நிலையில் விமானத்தில் இருந்த பிரச்சனை தெரிந்தவுடன் வேகவேகமாக விமானி செயல்பட்டார். அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். அந்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.


எல்லோரும் தப்பினர் 
 இந்த கோளாறு காரணமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வேறு விமானம் மூலம் பயணிகள் துபாய்க்கு அனுப்பப்பட்டனர். ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. இதுகுறித்து அந்த விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment