வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning - 17 - 12/10/2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning - 17 - 12/10/2018

தினம் ஒரு நாலடியார்


பாடல் - 17.
பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.

அர்த்தம் :
இளமைப் பருவமானது, குளிர்ச்சி மிக்க சோலையில் உள்ள பயனைத் தரும் மரங்களெல்லாம், பழங்கள் உதிர்ந்து வீழ்ந்தாற்போல் ஆகும்! ஆதலால் இப்போது இப்பெண்ணை இளமை அழகுமிக்க, வேல் போன்ற கண்ணையுடையவள் என்று வியந்து, இவளிடம் மிகவும் ஆசை கொள்ளாதீர்! இந்த இளம் பெண்ணும் ஒரு காலத்தில் முதுகு வளைந்து கூனியாகி, கோலாகிய கண்ணையுடையவளாவாள்! (கனிகள் உதிர்ந்த மரம் விரும்பத் தகாததாகி விடும். அதுபோல இளமை கழிந்த உடலும் விரும்பத் தகாததாம். முதுமையில் பார்வை குறைவதால் கோலைத் தட்டி வழி கண்டு செல்வாள் என்பதை உணர்த்த 'கோல் கண்ணள்' என்றார்.)



அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment