ஆண்களின் கனவுகளுக்கு பணமும், அதிகாரமும் தான் தடையாக இருக்கும்.
ஆனால், பெண்களின் கனவுகளுக்கு ஒட்டுமொத்த சமூகமே தடையாக இருக்கும்.
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, காலம் மாறிவிட்டது பெண்கள் சிறகடித்து பறக்க
துவங்கிவிட்டார்கள் என கூறும் நபராக நீங்கள் இருந்தால்... உங்கள் தெருவில்
தனக்கு பிடித்த படிப்பை தேர்வு செய்ய முடியாத, தனக்கு பிடித்த வேலையை அடியை
சுதந்திரம் இல்லாத, தனக்கு பிடித்த வயதில் திருமணம் செய்துக் கொள்ள
முடியாத? பெண்களே இல்லை என நீங்கள் கை தூக்க முடியுமா? குறைந்தபட்சம்
உங்கள் குடும்பத்தில்...
முடியாது...!
நாம் நம் வீட்டு சுவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை
கொண்டே, உலகும் இப்படி தான் இருக்கும் என கிணற்று தவளைகளாக கத்திக்
கொண்டிருக்கிறோம். அதிலும் சிலர் நான் யோக்கியன் என சாயம் பூசிக் கொண்ட
நரியாக உலாவி வருகிறார்கள்.
இப்படி ஒரு பெண்ணை, மகளை, சகோதரியை நீங்களும் உங்கள் தெருவிலோ,
அலுவலகத்திலோ, உறவினர் மத்தியிலோ கண்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள்
உண்டு...
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
தடைகள்!
15 வயதுக்கு மேல் ஆண்களுடன் பேசி பழகக் கூடாது, ஆண் தோழர்களே இருக்க
கூடாது. கல்லூரி படித்த முடித்த பிறகு வெளியூர்களுக்கு உறவினர் துணை
இல்லாமல் செல்ல கூடாது. 25 வயதுக்குள் திருமணமாகி வேறு வீட்டுக்குள்
சிறைபிடித்துவிட வேண்டும். இதுவே, இன்றளவும் 70%க்கும் மேலான இந்திய
பெண்களின் வாழ்க்கை முறை.
சிறகொடிக்கப்பட்டது...
தனக்கான உலகில் இளவரசியாக வாழ கனவுகண்ட தேவதை அவள். அவள் பெயர் தேவதை என்ற
வைத்துக் கொள்ளுங்களேன். தேவதை போல வாழ நினைத்தால் என்னவோ அவளது சிறகுகளை
வெட்டிவிட்டார்கள். அவளது கனவுகள் ஒன்றும் இமாலயம் அளவிற்கு பெரியதல்ல.
சராசரியாக எல்லா ஆண்களிடமும் நாம் காணும் சாதாரண கனவு. எனக்கு பிடித்த
படிப்பு, நான் விரும்பும் வேலை செய்ய வேண்டும். அவ்வளவு தான்.
ஆனால், அதற்கும் திருமணம் என்ற பெரும் தடை வந்து விழுந்தது அவளது வாழ்வில்!
முரண்!
பருவமடைந்த பிறகு வெளி ஆண்களுடன் பேசவே கூடாது என கூறும் பெற்றோர்.
முழுமையாக அறியாத ஒருவனை திருமணம் செய்துக் கொள்ள கூறி, திருமணமான முதல்
நாளே, அந்நாள் வரை பாதுகாத்த கற்பை பறிகொடு என்பர். இதில் என்ன நியாயம்
இருக்கிறது. ஆனால், அநியாயம் நிறையவே இருக்கிறது, பிடிக்கிறதோ இல்லையோ,
தனது ஆண்மையை நிரூபிக்க ஒரு கருவியாக மட்டுமே பெண்ணுடலை காணும்
அதிமேதாவிகள் இருக்கிறார்கள்.
என்னத்த படிச்ச...
ஒரு பெண்ணை அவளது சம்மதம் இன்றி தொடக் கூடாது என்பது கூட அறியாமல் என்னத்தை
படித்து, கிழித்து கைநிறைய சம்பாதிக்கிறாய்? இது தான் அவளுக்குள் எழுந்து
குறைந்த கோபத்தின் வெளிப்பாடாக இருந்த கேள்வி. அதுவும் மனதுக்குள் மட்டுமே
வெளியே கூற இயலாத நிலை.
தொடர்ச்சியான கற்பழிப்புகள்!
முதல் இரவில் இருந்து பிரதி இரவுகள் அனைத்தும் தொடர்ச்சியான கற்பழிப்பு
நிகழ்வுகளாகவே நகர்ந்தன. இந்நாளாவது நன்னாளாக விடியுமா என அச்சம்
இருக்கும். கெஞ்சி, அழுது, காலில் விழுந்தும் அவன் அந்த தேவதையை
கற்பழிப்பதை நிறுத்தவே இல்லை.
அவள் அந்த அறையின் மூலையில் சென்று குறுகி படுத்திருந்தாலும், அந்த
மிருகத்திற்கு பசி வந்துவிட்டால் அவள் மெத்தையில் தான் படுக்க வேண்டும்.
அவனது இச்சை தீரும் வரை, விறைப்பு அடங்கும் வரை இவள் வலிகளை தாங்கிக் கொள்ள
வேண்டும் என்பதே ஒரே வழியாக இருந்தது.
அட்ஜஸ்ட்!
ஓர் உறவில் இருவரும் செய்துக் கொள்வது தான் அட்ஜஸ்ட்மெண்ட். ஒருவர் மட்டும்
செய்வது, ஒருவரை மட்டும் செய்துக் கொள் என கூறுவது வன்கொடுமை.
பெற்ற தாயிடம் போய் கூறிய போது, அட்ஜஸ்ட் செஞ்சுக்க... அவன் உன்
வாழ்க்கையில அக்கறை எடுத்துக்க வந்திருக்கான். அவன்தான் உனக்கு எல்லாமே
என்ற போது.... நடந்த அத்தனை அவலத்தையும் கூறி அழுதால் அந்த தேவதை. ஆனால்,
அம்மாவோ... அப்படி தான் இருக்கும்.. சரி ஆயிடும் என கூறிய போது. இந்த
நரகத்தில்இருந்து தப்பிக்கவே முடியாதோ என்ற அச்சம் அந்த தேவதைக்குள்
அதிகரிக்க துவங்கியது.
திட்டம் தீட்டினாள்...
மனிதனின் வெற்றி அவனது போராட்ட குணத்தில் தான் இருக்கிறது. தன்னை
காப்பாற்றிக் கொள்ள நான் தான் போராட வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் அந்த
தேவதை. தனக்கு நடக்கும் வன்கொடுமைகளை பதிவு செய்ய ஆரம்பித்தாள். அதை சமூகதள
செயலிகள் மூலம் தான் அறிந்தவர்களுக்கு அனுப்பினாள்.
பிறந்தது விடியல்!
தன் நபர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த ஊக்கத்தில்
நீதிமன்றத்தில் தனது கணவன் மூலம் தான் கடந்த ஆறுமாதத்தில் எதிர்கொண்ட
வன்கொடுமைகளை பற்றி கூறினாள் அந்த தேவதை. தீர்ப்பு அவள் பக்கம் வந்தது.
தனது கனவுகளை தூசித்தட்டினாள் தேவதை.
இப்போது அவள் மீண்டும் படித்து வருகிறாள். கூடிய விரைவில் தனக்கு
விருப்பமான வேலையிலும் சேர்ந்துவிடுவாள்.
இந்த தேவதையின் கதை, பல தேவதைகளுக்கு ஊக்கமும், தைரியமும் அளிக்கும் என
நம்புகிறோம்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில்,...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ..
No comments:
Post a Comment