வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [பகீர் வாக்குமூலம்] அமிர்தசரஸ் ரயில் விபத்து: ரயில் ஓட்டுநர் பகீர் வாக்குமூலம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 21, 2018

[பகீர் வாக்குமூலம்] அமிர்தசரஸ் ரயில் விபத்து: ரயில் ஓட்டுநர் பகீர் வாக்குமூலம்



அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தின் போது தனக்கு கிரீன் சிக்னல் தான் வழங்கப்பட்டதாக ரயில் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா விழா கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக வாண வேடிக்கை நடத்தப்பட்டது. அதனை காண மக்கள் பலர் குவிந்திருந்துள்ளனர். சுமார் 700-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் நின்று வாண வேடிக்கையை பார்த்துள்ளனர். அப்போது அமிர்தசரசிலிருந்து ஜலந்தர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.


இதில் 61 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சுமார் 70வதுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து பேசியுள்ள ரயில் ஓட்டுநர், விபத்தின் போது தனக்கு கிரீன் சிக்னல் தான் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். விபத்து நேர்ந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டதால், அங்கு மக்கள் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது பற்றி தமக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார்.


ரயில்வே டிராக்கிற்கு பக்கத்திலே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி எற்பாட்டாளர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment