வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆட்டோ சங்கர் முதல் நிர்மலா தேவி வரை... பரபரப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நக்கீரன் கோபால்.. !
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 09, 2018

ஆட்டோ சங்கர் முதல் நிர்மலா தேவி வரை... பரபரப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நக்கீரன் கோபால்.. !



சென்னை: 90"களில் தமிழ் புலனாய்வுப் பத்திரிகை என்றாலே அது நக்கீரன் கோபால் என்று உதடுகள் உச்சரிக்க தொடங்கியது. அதற்கு காரணம் சாதாரண பத்திரிகையாக நடத்தி வந்த நக்கீரன் என்ற இதழை பரபரப்பு பத்திரிகையாக மாற்ற காரணமாக இருந்தது மறைந்த சந்தன வீரப்பன்தான்!!

வீரப்பன் விவகாரம்
 ஆட்டோ சங்கர் முதல் வீரப்பன் வரையான விவகாரங்களை தொட்டு பார்த்ததோடு மட்டுமின்றி அதனை நாடு முழுக்க பிரபலப்படுத்திய பெருமை நக்கீரன் கோபாலுக்குதான் போய் சேரும்.
தூர் வாரி இறைத்தார் நக்கீரன் இதழில் கோபால் கையாண்ட ஒவ்வொரு வழக்கும் தமிழகத்தையே அசைத்து பார்க்க கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு பிரச்சனையிலும், ஒவ்வொரு விவகாரங்களிலும், ஒவ்வொரு வழக்குகளிலும் மேலோட்டமாக எழுதிவிட்டு போகாமல் உள்ளே இறங்கி தூர் வாரி மாநிலம் முழுவதும் இறைத்தவர்தான் கோபால்!(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
நிறைய அவமானங்கள்
 ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் இப்படிப்பட்ட வழக்குகளை தேர்ந்தெடுத்து எழுதுவதற்கும் ஒரு தில் வேண்டும். அது கோபாலுக்கு நிறையவே இருந்தது. இதற்காக நிறைய அவமானங்களை சந்தித்தார். பத்திரிகை நடத்துவதில் நஷ்டங்கள் வந்து அவரை சூழ்ந்தன. போயஸ் கார்டனிலிருந்து வெளிவந்த கண்டனங்கள், தாக்குதல்கள், வழக்குகள் என பல்வேறு அடக்குமுறைகளை சாதுர்யத்துடன் கையாண்டார். அதற்காக நீதிமன்ற படிகளை தினந்தோறும் ஏறி இறங்கினார். இன்னமும் கூட சில வழக்குகள் போய் கொண்டுதான் இருக்கிறது.


வருத்தப்பட்ட கோபால்
 "ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில்தான் பத்திரிகையாளர்கள் அதிகம் அவமானப்படுத்தப்பட்டார்கள். பத்திரிகையாளர்களை அவர் எப்போது சந்திப்பார் என்று தெரியாத நிலையில் போயஸ் கார்டனுக்கு வெளியே மணிக்கணக்கில் காக்க வைப்பார், அப்படியே காத்து கிடந்தாலும் ஒருசிலரை மட்டும்தான் உள்ளே அனுமதிப்பார்" என்று ஒரு பேட்டியில் வருத்தத்தோடு சொன்னார்.

உலுக்கும் பிரச்சனைகள்
 ஆனால் புலனாய்வு பத்திரிகை உலகின் அசைக்க முடியாத ஒருவராக இன்றுவரை விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் நக்கீரன் கோபால். அரசியல் மட்டுமில்லாமல், தமிழகத்தை உலுக்கக்கூடிய கள்ளச்சாராயம், உள்ளிட்ட எல்லாவித பரபரப்பான செய்திகள் மூலமாக தமிழகத்தை மட்டுமல்லாது இந்தியா முழுமையையும் தன் பக்கம் திருப்பியவர்.


நிஜ முகங்கள்.
. வீரப்பன் விவகாரம் மட்டுமில்லை... சங்கர்ராமன் விவகாரம், இன்ஸ்பெக்டர் முகம்மது அலி, ஒருசில போலீஸ் அதிகாரிகளையே தன் கைக்குள் பெட்டி பாம்பாக அடக்கி வைத்த ஜெயலெட்சுமி என மிக முக்கியமான விவகாரங்களை முதலில் கொண்டு அவர்களின் நிஜ முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது கோபால்தான். அதேபோல, ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர் சங்கர், போலீஸ்காரர்களின் துணையுடன் எப்படி ஒரு பயங்கரமான கொலைகாரனாக மாறுகிறான் என்பதையும் உலகுக்கு கொண்டு வர செய்தவர் கோபால்தான்.

வெற்றியின் சூட்சுமம்
 முகம்மது அலி விவகாரத்தை நக்கீரனில் எழுதியபோது, அந்த வழக்கை நடத்தி வரும் நீதிபதியே கோபாலிடம் கேட்டாராம், "இப்படி எழுதுவதை நிறுத்தினால் என்ன என்று". அதைபோல, நக்கீரன் இதுபோன்ற முக்கிய செய்திகளை முதலில் வெளியிட்டாலும் அதை மக்கள் உடனடியாக நம்புவதில்லை. ஆனால் அவை நீண்ட காலம் நிலைப்பதில்லை. எல்லா கிரிமினல்களும் வெளியில் வந்து சந்தி சிரிக்க தொடங்கும். இதுதான் நக்கீரன் இதழின் வெற்றியும் சூட்சுமமும் ஆகும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment