வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

குழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை



குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும்.


 குழந்தை என்ன நடந்தாலும் தாய், தந்தையரிடம் பயம் இல்லாமல் சொல்லும் அளவுக்கு உங்களது வளர்ப்புமுறை இருந்தால் எல்லாக் குழந்தைகளும் பாதுகாப்புடன் இருக்கும். குழந்தையின் பாதுகாப்பு பெற்றோர் கையிலே.
(தொடர்ச்சி கீழே...)

 

இதையும் படிக்கலாமே !!!

* குழந்தைக்கு எப்போது எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவைக் கொடுத்து பழக்க வேண்டும்.


* தண்ணீர் பாட்டிலும் ஸ்டீல் அல்லது காப்பரில் வாங்கலாம்.

* வாய் சிறிதாக உள்ள பாட்டிலை வாங்குவது நல்லது.

* பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிற்றுகிழமையாவது முழு நேரத்தையும் குழந்தையிடம் செலவிட வேண்டும்.


* வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. பாதுகாப்பும்கூட.

* பஸ், வேன்களில் நீண்ட தூரம் குழந்தை பயணம் செய்தால், முதுகுத்தண்டுவடம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.

* குழந்தையை படி, படி என அடிக்கடி கட்டாயப்படுத்தாமல், புரியும்படி சொல்வது நல்லது. விளையாட்டும் படிப்பும் இரண்டுமே குழந்தைக்கு இருப்பது நல்லது.

* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும். அந்த தனித்துவ திறனை கண்டுபிடிக்க முயலுங்கள்.


* பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி குழந்தையை வற்புறுத்த கூடாது.

* டிவி, மொபைல் விளையாட்டுகளைவிட உடலுழைப்பு தரும் விளையாட்டுகளை விளையாட குழந்தையை ஊக்குவியுங்கள்.

* அன்றாடம் தாயும் தந்தையும் காலை முதல் இரவு வரை என்ன நடந்தது எனக் குழந்தைகளிடம் தினமும் கேட்க வேண்டும். ஏனெனில் காலம் மிகவும் மோசமாக இருப்பதால் குழந்தையைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment