தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’
படத்தில் சமந்தா துணிச்சலான வேடத்தில் நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர்
தெரிவித்தார்.
ஆரண்ய காண்டம் படம் மூலம் இந்திய அளவில் கவனிப்பை பெற்றவர் இயக்குனர்
தியாகராஜன் குமாரராஜா. 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கும் படம் சூப்பர்
டீலக்ஸ்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
படத்தில் ஷில்பா என்னும் திருநங்கை
வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில்
நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி,
பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படத்தை
தயாரித்து இயக்கி இருக்கும் தியாகராஜன் குமாரராஜா படம் பற்றி கூறும்போது
‘சமந்தா இடம்பெறும் காட்சியில் தான் படம் தொடங்கும். மிகவும் துணிச்சலான
காட்சி அது. முக சுளிப்பே இல்லாமல் இயல்பாக நடித்துக்கொடுத்தார். இந்த
படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத
13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை.
ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம்
பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும். இந்த படம்
ஆந்தாலஜி வகையை சேர்ந்தது என்று செய்தி வெளியானது. அப்படி இல்லை. ஒரே கதை
தான். சில மணி நேரங்களில் நடக்கும் கதை’ என்று அவர் கூறினார். யுவன் சங்கர்
ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு பி.எஸ்.வினோத், நீரவ் ஷா இருவரும்
ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத.
No comments:
Post a Comment