வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேலாடையின்றி விழிப்புணர்வு பாடல் பாடிய செரினா வில்லியம்ஸ்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

மேலாடையின்றி விழிப்புணர்வு பாடல் பாடிய செரினா வில்லியம்ஸ்!



மார்புக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பாடலை டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செரினா வில்லியம்ஸ் ஒரு பாடலை பாடி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார். (தொடர்ச்சி கீழே...)  



இதையும் படிக்கலாமே !!!

 அந்த வீடியோவில் அவர் மேலாடை இன்றி தனது மார்பகத்தை கையால் மறைத்தவாறு உள்ளார். அவர் 'ஐ டச் மைசெல்ஃப்' என்று பாடுகிறார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில், ''பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை ஆம்ப்லெட் தனது பாடலில் எழுதியுள்ளார். இதுபோல் அவ்வப்போது சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்.



மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்துள்ளேன். வந்த பின் அவதிப்படுவதை விட வரும்முன் காப்பதே நல்லது என்பது அனைவரும் உணர்வீர்கள் என நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.


கிரிஸ்ஸி ஆம்ப்லெட்டால் என்ற ஆஸ்திரேலியர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். அவர் எழுதிய 'ஐ டச் மைசெல்ஃப்' என்ற தொகுப்பை அவரது நினைவாக செரினா பாடி வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment