வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பனங்கிழங்கில் பர்பி... வேதாரண்யம் தமிழாசிரியரின் புதிய தயாரிப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 04, 2018

பனங்கிழங்கில் பர்பி... வேதாரண்யம் தமிழாசிரியரின் புதிய தயாரிப்பு


தேங்காய் பர்பி, சாக்லேட் பர்பி, ஹார்லிக்ஸ் பர்பின்னு கேள்விப்பட்டு இருப்பீங்க. ஆனால் இதைவிட உடலுக்கு ஊட்டம் அளிக்கும் பனங்கிழங்கு பர்பி தயாரித்து சாதித்துள்ளார் வேதாரண்யத்தை சேர்ந்த 
தமிழாசிரியர் என்பது தெரியுங்களா?

வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் பனங்கிழங்கை மூலப்பொருளாக கொண்டு பர்பி தயாரிக்கும் பணியில் தமிழாசிரியர் கார்த்திகேயன் என்பவர் ஈடுபட்டுள்ளார். பாஸ்ட் புட் என்ற நவீன வாழ்க்கையில் பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டோம். 

உணவே மருந்தாக இருந்த காலம் போய் இன்று வேளைக்கு இத்தனை கலர் மாத்திரைகள் என்று சாப்பிடும் நிலைக்கு நம் ஆரோக்கியம் போய்விட்டது. இப்போது மீண்டும் பழங்காலத்திற்கு திரும் ஆரம்பித்துள்ளோம். அந்த வகையில் பனங்கிழங்கை பறித்து பின்பு அதனை வேகவைத்து நன்கு உலர வைத்து மாவாக்கி அதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலை, ரவா, முந்திரி பருப்பு, ஏலக்காய், நெய் சேர்த்து வெல்லப்பாகும் கொண்டு தயாரிக்கப்படும் கேக் வடிவிலான பனங்கிழங்கு பர்பி தயார் செய்கிறார் கார்த்திகேயன்.


இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கும் வகையில் உண்பதற்கு ஏற்றதாகவும் அமைகிறது. ஆரோக்கியமான ஒன்றாகவும் உள்ளது. வழக்கமாக ஒரு பனங்கிழங்கு முப்பது பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதை பர்பியாக தயார் செய்யும்பொது குறைந்த பட்சம் ரூ.3 மதிப்பு கூட்டப்பட்டப்படுகிறது.

பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மாவுச்சத்து போன்றவையுடன் வெல்லம் இணையும்போது இரும்புச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது. உடல் எடையைக் குறைத்து உடலை வலுப்படுத்துகிறது. பனங்கிழங்கு மலச்சிக்கலை தீர்த்து உடலில் உள்ள கழிவுகளையும் பிரித்தெடுத்து வெளியேற்றுகிறது.


ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். ஒரு கிலோ பர்பி தயார் செய்ய 25 பனை கிழங்கு உள்பட மற்ற பொருட்கள் அனைத்தும் சேர்த்து ரூ.200 செலவாகிறது. ரூ.250-க்கு ஒரு கிலோ பர்பி விற்பனையாகிறது என்று தெரிவித்துள்ளார்.

Popular Posts

No comments:

Post a Comment