65 வயதான மாமனாரை திருமணம் செய்த 21 வயது மருமகள்
பல நேரங்களில் நிஜ வாழ்க்கையும் சினிமா போலவே இருக்கிறது. சில
நேரங்களில் சினிமாவை மிஞ்சுவதாகவும் இருக்கிறது!!
பாட்னா பகுதியில் சமஷ்டிபூர் என்ற இடம் உள்ளது. இங்கு வசித்து வருபவர்
ரோஷன் லால். 65 வயதான இவர் தன் செல்ல மகனுக்கு திருமணம் செய்ய பெண்
தேடினார். ஒருவழியாக அதே பகுதியில் வசித்து வரும் ஸ்வப்னாவை தன் மகனுக்கு
பேசி முடித்தார். ஸ்வப்னாவுக்கு 21 வயது ஆகிறது. இரு வீட்டிலும் திருமணம்
நிச்சயிக்கப்பட்டது.
தடபுடல் ஏற்பாடு
தடபுடல் ஏற்பாடுகள் நடக்க தொடங்கியன. ஊர் முழுக்க பத்திரிகைகளை இரு
வீட்டாரும் கொடுத்தனர். கல்யாணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரு
வீடுகளுமே விழாக் கோலம் பூண்டது. கல்யாணத்துக்கு ஆட்கள் வர ஆரம்பித்தனர்.
களை கட்டியது கல்யாண மண்டபம்!!
விழித்த பெற்றோர்கள்
மணமகள் ஆயிரம் கனவுகளுடன் அலங்கார கோலத்தில் இருந்தார். ஆனால் மாப்பிள்ளையை
காணோம். எல்லா இடமும் தேடி தேடி பார்த்தார்கள்... கடைசியில் பார்த்தால்,
மாப்பிள்ளை தன் காதலியுடன் ஊரைவிட்டே எஸ்கேப் ஆகிவிட்டிருந்தார். என்ன
செய்வதென்றே தெரியாமல் இரு வீட்டு ஆட்களும் முழித்தார்கள்.. கல்யாணத்துக்கு
ஆட்களோ பரிசு பொருட்களுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.
அசிங்கம்.. அவமானம்..
என் மகன் தப்பு செய்துட்டான், அதனால இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று
மாப்பிள்ளையின் அப்பா ரோஷன்லால் சொன்னார். ஆனால் பெண் வீட்டிலோ, "இவ்வளவு
ஏற்பாடு நடந்தாச்சு, எல்லாரையும் வரவழைச்சிட்டோம், கல்யாணத்தை நிறுத்தினா
எங்களுக்கு அசிங்கம்" என்றார்கள். சரி.. அதற்கு என்னதான் செய்யது என்று
கேட்டார் மாப்பிள்ளையின் அப்பா.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
கவுரவம்.. கவுரவம்
அதற்கு பெண் வீட்டாரோ, "பேசாமல் நீங்களே என் பொண்ணை கல்யாணம்
பண்ணிக்குங்களேன்" என்று சொன்னார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த
ரோஷன்லால், மறுத்தார். ஆனாலும் பெண் வீட்டில் அவரை வற்புறுத்தி கெஞ்சி
கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் வேறு வழியின்றி 65 வயதான ரோஷன்லால்,
மருமகளாக வரப்போகிற 21 வயது ஸ்வப்னாவுக்கு தாலி கட்டினார். 'கவுரவம்...
கவுரவம்..ன்னு பேசி பேசியே, கடைசியில் ஸ்வப்னா வாழ்க்கையை இப்படி
ஆக்கிட்டாங்களே' என்று கல்யாண கோஷ்டியினர் ஆடிப்போய்விட்டனர்!!
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
வரும் 8 ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரி , கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ...
-
ஒரு காலத்தில் ... ரொம்ப பின்னாடி போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு கேக்கமாட்டாங்க . உங்க ...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
No comments:
Post a Comment