வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காசு, பணம், துட்டு, மணி, மணி.. நடுரோட்டில் கத்தை கத்தையாக பணம்.. காற்றில் பறந்த நோட்டுகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

காசு, பணம், துட்டு, மணி, மணி.. நடுரோட்டில் கத்தை கத்தையாக பணம்.. காற்றில் பறந்த நோட்டுகள்



நடுரோட்டில் கத்தை கத்தையாக பணம்.. காற்றில் பறந்த நோட்டுகள்

செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க்: இதுக்கு என்னதான் அர்த்தம் எடுத்து கொள்வது என்றே புரியவில்லை. ரஷ்யாவின் செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் நகர்... நடுரோட்டில் ஒரு காஸ்ட்லி கார் வந்து நிற்கிறது... அது முக்கியமான ரோடு என்பதால் மக்கள் கூட்டம், வண்டிகள் என பரபரப்பாகவே இருக்கிறது.. பிறகு கார் மெதுவாக நகர்கிறது. அந்த கார் கண்ணாடியிலிருந்து ஒரு கை வெளியே நீள்கிறது. கருப்பு சட்டை அணிந்திருக்கிறார் அந்த நபர்.
                 

பணம் பறக்கிறது
அவரது கையிலோ கத்தை கத்தையாக பணம். அவங்க நாட்டில் சொல்வதானால் ரபிள்ஸ். கார் செல்ல செல்ல, அந்த பணத்திலிருந்து ஒவ்வொன்றாக ரோட்டில் போட்டுக் கொண்டே போகிறார் அந்த நபர். பணம் காற்றில் பறக்கிறது. இதை அண்ணாந்து பார்த்த பொதுமக்கள் ஓடிவந்து அந்த பணத்தை எடுக்க அலைகிறார்கள்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

வாழ்வின் பெரும்பகுதி 
பறந்து பறந்து கீழே விழும் அந்த பணத்துக்கு போட்டா போட்டியும் நடக்கிறது. அப்போது ஒரு குரல் காருக்குள்ளிருந்தே வருகிறது. பணத்தை வாரி இறைத்தவர்தான் பேசுகிறார், "பணம் என்பது காகிதம் மட்டுமே என்றும், அதன் மதிப்பை அதிகரிக்க மனிதன் தமது வாழ்வின் பெரும்பகுதியை இழக்கிறான்" என்று பணத்தை ஓடி ஓடி எடுக்கும் மக்களை பார்த்து பரிதாபமாக கூறுகிறார்.


முகத்தை காட்டவே இல்லை 
இப்படி பணத்தை நடுரோட்டில் பறக்க விட்டதையும், அதை மக்கள் அலைந்து கொண்டு எடுப்பதையும் அவரே வீடியோவாகவும் எடுத்துள்ளார். அதை இணையத்தில் பதிவிட்டும் உள்ளார். இவர் அந்த நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் ஒருவரின் மகனாம். ஆனால் தன் முகத்தை கடைசிவரை இவர் காட்டி கொள்ளவே இல்லை. கிட்டத்தட்ட அந்த பணம் நம்ம ஊர் கணக்குப்படி 56 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

உதவியா? திமிரா? 
இதே நபர், மணலில் சிக்கிய தமது மெர்சிடஸ் எஸ் 500 கூப் ரக காரின் டயரில் பணத்தாள்களை போட்டு மீட்ட புகைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த பணக்கார வீட்டு பையனின் செயலை ஏழை எளியவருக்கு செய்யும் உதவி என்று எடுத்து கொள்ள முடியாது. காரணம், அதற்கான முறையோ, வழியோ, செயலோ சத்தியமாக இது கிடையவே கிடையாது. அப்படியென்றால் இது பணத் திமிரை காட்டுகிறதா? கண்டிப்பாக அப்படித்தான் இதை சொல்ல வேண்டியிருக்கிறது!!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment