இந்தியாவில் இனிப்புகளில் மட்டுமே சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான
பொருள் என்றால் அது முந்திரிதான். முந்திரி பிடிக்காது என்று கூறுபவர்கள்
மிக மிக சொற்பமே. இனிப்புகளில் முந்திரியை தேடி தேடி சாப்பிடுபவர்களே இங்கு
அதிகம். இதற்கு குழதைகளை பெரியவர்கள் என்ற விதிவிலக்கல்ல. இதற்கு காரணம்
அதன் சுவைதான்.
முந்திரி பருப்பு சுவையான உணவாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான
உணவாகவும் இருக்கிறது. பொதுவாக நிலவும் ஒரு கருத்து முந்திரி சாப்பிடுவது
பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் இது முழுவதும் உண்மையல்ல. அளவுக்கு
அதிகமாக சாப்பிடும்போது மட்டுமே இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
குறிப்பிட்ட அளவில் சாப்பிடும்போது இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
இதய ஆரோக்கியம்
மற்ற பருப்புகளுடன் ஒப்பிடும்போது முந்திரி பருப்பில் குறைந்தளவு கொழுப்பே
உள்ளது குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒலிசிக் அமிலம் உள்ளது.
இதில் உள்ள கொழுப்பு மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் உங்களை
மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும்.
எடை இழப்பு
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான முக்கியமான பொருள் மக்னீசியம். இது
முந்திரியில் அதிகம் உள்ளது. தொடர்ந்து முந்திரியை உணவில்
சேர்த்துக்கொள்ளும் போது உங்கள் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.
முடி ஆரோக்கியம்.
முடி ஆரோக்கியம்
உங்கள் முடியின் நிறத்திற்கு காப்பர் மிகவும் அவசியமான ஒன்று. காப்பர்
அதிகளவு உள்ள முந்திரியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அது
நீங்கள் விரும்பும் அடர்த்தியான கருப்பு நிற முடியை வழங்கும்.
எலும்புகளின் ஆரோக்கியம்
எலும்புகளின் ஆரோக்கியம்
முந்திரியில் மக்னீசியம் உள்ளது. கால்சியம் போலவே மக்னீசியமும்
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று அனைவரும் அறிவோம்.
நமது எலும்புகளில் நிறைய மக்னீசியம் உள்ளது. இதில் உள்ள எலாஸ்டின்
எலும்புகளின் அமைப்பிற்கும், வலிமைக்கும் உதவி புரிகிறது.
ஆரோக்கிய நரம்புகள்
ஆரோக்கிய நரம்புகள்
மக்னீசியம் எலும்புகளின் மேற்புறத்தில் சேமிக்கப்படுகிறது. இது மற்ற
நச்சுக்களை உடலுக்குள் நுழைவதை தடுத்து இரத்த நாளங்கள் மற்றும் தசைகளை
தளர்வடைய செய்கிறது. உடலில் மக்னீசியம் குறையும்போது நச்சுக்கள் இரத்த
நாளங்களில் நுழைந்து விடும். இதனால் தலைவலி மற்றும் சில ஆரோக்கிய
குறைபாடுகள் ஏற்படலாம்.
எடை இழப்பு
முந்திரி பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவாக கருதப்படுகிறது, ஆனால் அதில்
நிறைய நல்ல கொழுப்புகள் உள்ளது. எனவே உங்களின் நம்பிக்கை உண்மையல்ல. வாரம்
இருமுறை முந்திரி பருப்பு சாப்பிடுபவர்களின் உடல் எடை சீராக இருப்பதோடு
குறையவும் உதவிசெய்கிறது.
Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு...
-
ஒருவர் 20 முதல் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால் அவருக்கு பத்தாண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
வரும் 8 ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரி , கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட்டாக இளைஞரை கிணற்றில் தள்ள, நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். மறுநாள் அவரது செ...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்ப...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்...
-
அட, பாவி மனுஷா… உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..! எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாத..
No comments:
Post a Comment