தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதியும் சுமக்க வேண்டாம் என விஷால் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று (அக்டோபர் 4) ரிலீஸாகியிருக்கும் படம் ‘96’. த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். தேவதர்ஷினி, ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார். விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ படத்தைத் தயாரித்த இவர், ‘துப்பறிவாளன்’ படத்தை வாங்கி வெளியிட்டார். அந்த நட்பு அடிப்படையில், ஒன்றரை கோடி ரூபாயை பைனான்ஸுக்கு வாங்கி நந்தகோபாலுக்குக் கொடுத்துள்ளார் விஷால்.
அந்தத் தொகையை, ‘96’ படத்தின் ரிலீஸின்போது தருவதாக நந்தகோபால்
கூறியதால், தற்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் விஷால். அது
தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று காலை வரை நீண்டுகொண்டு போகவே, படத்தின்
ஹீரோவான விஜய் சேதுபதி தலையிட்டு, அந்தப் பணத்துக்குப் பொறுப்பேற்றுக்
கொண்டார்.
இதன்மூலம் பிரச்சினை முடிவுக்கு வர, நேற்று ‘96’ படம் ரிலீஸானது. இந்நிலையில் தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதியும் சுமக்க வேண்டாம் என விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷால் தரப்பிடம் விசாரித்த போது, ''விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளைச் சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை விஜய் சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய் சேதுபதி கொடுப்பதாகக் கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையைத் தர வேண்டாம். அதற்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார்.
நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ.1.50 கோடி தொகையை விஷால், நந்தகோபால் அவரிடமே பெற்றுக்கொள்கிறார். அதுவரைக்கும் அந்தத் தொகைக்கு விஷால் வட்டியும் கட்டுவார். ஆகவே, பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் நினைக்கிறார். மேலும், இந்தப் பிரச்சினையிலிருந்து விஜய் சேதுபதி எந்த வலியும் இல்லாமல் வெளியே வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் விஷால் தெரிவித்தார்'' என்றனர்.

Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு...
-
ஒருவர் 20 முதல் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால் அவருக்கு பத்தாண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
வரும் 8 ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரி , கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட்டாக இளைஞரை கிணற்றில் தள்ள, நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். மறுநாள் அவரது செ...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்ப...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்...
-
அட, பாவி மனுஷா… உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..! எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாத..
No comments:
Post a Comment