இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரது
இதயத்தையும் உருக்கியுள்ளது. கற்பனை கூட செய்து பார்க்க முடியாத உணர்ச்சிப்
பெருக்கான சம்பவம் இது.
பிர்மிங்காமின் சுட்டன் கோல்ட்பீல்டில் ஒரு படகு மையம் உள்ளது. அதன் பெயர் பிவிஜிஎஸ் ரோவிங். இந்த படகு இல்லத்தின் நுழைவாயில் கேட்டில் ஒரு ரோஜாப் பூவும், கூடவே ஒரு குறிப்பும் வைக்கப்பட்டிருந்தது. அதை வைத்தது யார் என்று தெரியவில்லை. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
அதைப் பார்த்த அந்த படகு மையத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் குறிப்பைப்
பார்த்து அதிர்ந்து விக்கித்து நின்று விட்டனர். அந்த குறிப்பில், யாராவது
இந்த ரோஜாவை ஏரியில் போட முடியுமா? எனது மறைந்த கணவரின் அஸ்தி இந்த
ஏரியில்தான் கலந்துள்ளது.
என்னால் ஏரிக்குச் செல்ல முடியவில்லை. எனது வீல்
சேர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் படகு இல்லத்தின் நுழைவாயிலும்
மூடப்பட்டு விட்டது. நான் இரவுக்குள் வீட்டுக்குத் திரும்பிப் போக
வேண்டும். நன்றி என்று எழுதப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து நெகிழ்ந்து போன படகு இல்லத்தினர் அந்த ரோஜாவை, பெயர் முகம்
தெரியாத அப்பெண்ணின் விருப்பபடி ஏரியின் நடுவில் விட்டனர். மேலும் அதை
புகைப்படம் எடுத்து தங்களது டிவிட்டரிலும் போட்டுள்ளனர். அதில் யார் என்று
தெரியாது. ஆனால் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்று
குறிப்பிட்டுள்ளனர்.
வைரல் புகைப்படம்
உலகெங்கும் இந்த ரோஜா புகைப்படமும், அப்பெண்ணின் நெகிழ்ச்சியான
கோரிக்கையும் வைரலாகியுள்ளது. பலரும் உருக்கமாக தங்களது கருத்துக்களைப்
பதிவிட்டு வருகின்றனர்.
மனிதம் உயிர்ப்போடு இருக்கிறதென்றால்.. அந்த உயிர்ப்பை பிடித்து இறுக்கி
வைத்திருப்பது காதல்தான்... அன்பும், பாசமும், காதலும் இயைந்து உருகி
ஓடுகிறது இப்பெண்ணின் உணர்வுகளில்.
உயிர்ப்பிக்கப்பட்ட மனிதம்
மனிதகுலம் மீதான நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மனிதம் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வருத்தத்துடன் கூடிய மகிழ்ச்சி
இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது. படகு இல்லத்துக்குப் பாராட்டுக்கள்.
அருமையான செய்தி
நான் இதுவரை படித்த செய்திகளிலையே மிகவும் அழகான, அதேசமயம், மிகவும் துயரமானது இதுதான்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
No comments:
Post a Comment