வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாற்று அறுவை சிகிச்சை மூலம் தாயின் கருப்பையில் குழந்தை பெற்றெடுத்த மகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

மாற்று அறுவை சிகிச்சை மூலம் தாயின் கருப்பையில் குழந்தை பெற்றெடுத்த மகள்



ஆசியாவிலேயே கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் முதல் குழந்தை பிறந்துள்ளது. தாயின் கருப்பையில் மகள்குழந்தை பெற்றெடுத்து உள்ளார். 


குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார். மூன்று முறை கருச்சிதைவு, மேலும் ஒரு முறை குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இனிமேல் மீனாட்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!

இதனையடுத்து, மீனாட்சியின் தாய் அவருக்குக் கருப்பையைத் தானமாக வழங்கியுள்ளார். கடந்த வருடம் மே மாதம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மீனாட்சி உடல்நிலை சற்று தேறிய பிறகு இந்த வருடம் ஏப்ரல் மாதம் இவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை செய்யப்பட்டது.


இந்த நிலையில், நேற்று புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மீனாட்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மீனாட்சிக்குப் பிறந்த குழந்தை 1450 கிராம் எடையுடன் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தாய், குழந்தை இருவரும் நலமுடன் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts




No comments:

Post a Comment