கால மாற்றங்கள் ஏற்படுவதற்கு ஏற்ப நாமும் மாற்றம் பெறுகின்றோம்.
மாற்றங்கள் நமக்கும் நம்மை சுற்றி இருக்கும் சமூகத்துக்கும் நன்மை
ஏற்படுத்தினால் அது வரவேற்க தக்கதே. ஆனால், அவை நம்மை தவறான பாதையில்
அழைத்து சென்றால் நமக்கு நன்மையை தராது. அந்த வகையில் நாம் பல சிறந்த
விஷயங்களை மறந்து விட்டோம்.
பழங்காலத்தில் நாம் பயன்படுத்திய பல பழக்க வழக்கங்கள், வாழ்வியல்
முறைகள் இன்று முற்றிலும் மாறி உள்ளது. இதில் நாம் பயன்படுத்திய ஒரு சில
குறிப்புகளும் சேரும். இந்த குறிப்புகள் நமக்கு மிகவும் பக்க பலமாக
இருந்தவை. அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
நம் தேசம் இந்தியா..!
நமக்கு எதை பற்றி பேசினாலும் ஒரு வித உணர்வு பூர்வமான நினைவுகள் வராது.
ஆனால், "இந்தியா" என்ற ஒற்றை வார்த்தை கேட்டதுமே நம் அனைவருக்கும் நிச்சயம்
உள்ளுக்குள் ஒரு ஆழ்ந்த உணர்வு இருக்க தான் செய்யும். இது தான் நாட்டு
பற்று என கருதப்படுகிறது.
மறக்கப்பட்டவை ஏராளம்..!
காலப்போக்கில் நாம் பல வகையான பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள், குறிப்புகள்
போன்றவற்றை மறந்தே விட்டோம். அதற்கு பதிலாக இன்றைய வேதியியல்
பொருட்களையும், செயற்கை உலகிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதில்
நாம் மறக்கப்பட்ட குறிப்புகள் தான் அதிகம்.
வேப்பிலை குளியல் தெரியுமா..?
இன்று நாம் நமது முடியை பாதுகாக்க என்னென்னமோ செய்கின்றோம். ஆனால், அவை
எல்லாம் எந்த விதத்திலும் நமது முடியை பாதுகாக்க போவதில்லை. முடி கொட்டும்
பிரச்சினைக்காக பழங்கால இந்தியர்கள் வேப்பிலை குளியலை மேற்கொண்டனர். இவை
தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வை தடுக்கும்.
கற்றாழை கண்டிஷ்னரா..?
மிக அற்புதமான மூலிகைகளில் இந்த கற்றாழையும் ஒன்று. இவற்றை நாம்
முன்பெல்லாம் கண்டிஷ்னராக பயன்படுத்தி வந்துள்ளோம். ஆனால், இன்று கண்ட
கெமிக்கல்ஸ் கொண்ட ஷாம்பூக்களை தலைக்கு தேய்த்து குளித்து வருகின்றோம்.
இதனால், முடி பாழாகிறதே தவிர முடி பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
எவ்வாறு தயாரிப்பது..?
முதலில் கற்றாழையில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இதனை
நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் தேவைப்பட்டால் எலுமிச்சை
சாறு சேர்த்து கொள்ளலாம். இறுதியாக இதனை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால்
பொடுகு, முடி உதிர்வு, வறண்ட தலை ஆகியவை குணமாகும்.
பச்சை தண்ணி குளியாலா..?
இப்போதுதான் ஹீட்டர், கெய்சர் என்றெல்லாம் வித விதமான முறையில் நீரை
சூடுபடுத்தி பயன்படுத்துகின்றோம். ஆனால், உண்மை என்னவென்றால் நாம் நமது
தலைக்கு சூடு நீரை பயன்படுத்த கூடாது. முன்பெல்லாம், இந்தியர்கள் குளிர்ந்த
நீரையே தலைக்கு பயன்படுத்தி வந்தனர்.
தினமும் தேங்காய் எண்ணெய்..!
நாம் நமது பள்ளி பருவத்தில் இது போன்ற அளவில் முடி உதிர்வோ, வெள்ளை முடியோ,
பொடுகோ இருந்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் முடி சார்ந்த பிரச்சினைகள்
அதிகமாகி விட்டது. காரணம், தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தலே. அதுவும்,
தேங்காய் எண்ணெயை நாம் தினமும் தலைக்கு தேய்த்து வந்தாலே முடி பிரச்சினை
அனைத்தும் தீர்ந்து விடும்.
நெல்லிக்கனி மாஸ்க் தெரியுமா..?
முடி பிரச்சினையை அன்று தீர்த்து வைத்ததில் இந்த நெல்லிக்கனிக்கு முக்கிய
பங்கு உள்ளது. குறிப்பாக நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி தான் முடியின்
வளர்ச்சிக்கும், முடி சார்ந்த பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளியாக இருந்தது.
எவ்வாறு பயன்படுத்துவது..?
நெல்லிக்கனியை சாப்பிட்டால் சரி அல்லது தலைக்கு நேரடியாக பயன்படுத்தினாலும்
சரி, எல்லா விதத்திலும் இது நன்மையே தரும். நெல்லி பொடியை எடுத்து கொண்டு
சிறிது நீர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி பிரச்சினைக்கு
முற்றுப்புள்ளி கிடைத்து விடும்.
இனி நமது பாரம்பரிய முறையை பின்பற்றி அழகுடனும் ஆரோக்கியத்துடனும்
வாழ்வோம். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள்
நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
No comments:
Post a Comment