சிவகிரி அருகே மின்வாரிய பெண் ஊழியரை உருட்டு கட்டையால் தாக்கி அவருடைய கணவர் மற்றும் மாமியார் படுகொலை செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்திபாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி, அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார். (தொடர்ச்சி கீழே...)
தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
திருமணம் முடிந்து தமிழ்மணியும், ஜோதிமணியும் ஒரு ஆண்டு ஒன்றாக
குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2
பேரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்து உள்ளார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தமிழ்மணியின் வீட்டில் அவருடைய நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவரும் தங்கி இருந்து உள்ளார்.
நேற்று முன்தினம் விவாகரத்து வழக்கு தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் லோகநாதன் ஆகியோர் பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் 4 பேருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து அங்கிருந்த உருட்டு கட்டையை எடுத்து ஜோதிமணியை தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள். இதுபற்றி அறிந்ததும் சிவகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று ஜோதிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்திபாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி, அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்து உள்ளார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தமிழ்மணியின் வீட்டில் அவருடைய நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவரும் தங்கி இருந்து உள்ளார்.
நேற்று முன்தினம் விவாகரத்து வழக்கு தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் லோகநாதன் ஆகியோர் பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் 4 பேருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து அங்கிருந்த உருட்டு கட்டையை எடுத்து ஜோதிமணியை தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள். இதுபற்றி அறிந்ததும் சிவகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று ஜோதிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில்,...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ..
No comments:
Post a Comment