ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் உடனே கட்சி தொடங்குவார்
என்று எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதே
எங்கள் இலக்கு என்று கூறி ரஜினி மக்கள் மன்றத்தை உருவாக்கி அதற்கு
உறுப்பினர் சேர்ப்பதிலும் நிர்வாகிகளை நியமிப்பதிலும் தீவிரம் காட்டினார்.
கபாலியை முடித்து விட்டு தொடர்ந்து காலா படத்தில்
நடிக்கவும் தொடங்கினார். காலா படம் வெளியானதும் கட்சியை அறிவிப்பார் என்று
எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பேட்ட படத்தில் நடிக்க போய்விட்டார். இந்த
படத்தை முடித்து விட்டு அடுத்த மாதம் டிசம்பர் 12–ந்தேதி தனது பிறந்த
நாளில் கட்சி பெயரை அறிவித்து விடுவார் என்று பேசப்பட்ட நிலையில் அப்போது
இல்லை என்று மறுத்து விட்டார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
எனவே ரஜினிகாந்த்
கட்சி தொடங்குவது தள்ளிப்போகிறது. அதற்கு முன்பாக இன்னொரு படத்தில் நடிக்க
முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் கூறுகின்றனர். ஏற்கனவே நடித்த
கபாலி, காலா படங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும்
கதையம்சத்தில் இருந்தன. நவம்பர் மாதம் திரைக்கு வர இருக்கும் 2.0 படம்
எந்திர மனிதன் பற்றிய அறிவியல் கதை.
எனவே இவை
மாதிரியாக இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் வகையில் எம்.ஜி.ஆர்
பாணியிலான ஒரு படத்தில் தேர்தலுக்கு முன்பு நடித்து விட ரஜினிகாந்த்
ஆசைப்படுவதாகவும் இதற்காக அருணாசலம் படம் மாதிரி கதையொன்றை அவர்
எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாசிடம்
கதை கேட்டு இருக்கிறார். அவரும் ரஜினி எதிர்பார்ப்பது மாதிரியான கதையை
தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய படத்தின் அறிவிப்பு
வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலியின் 16 வயது மகளை கர்ப்பமாக...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
இன்னும் சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் தயவு செய்து இந்த கட்டுரையை வாசிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பிஞ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
நாம இன்னும் என்னென்ன அவலங்களை எல்லாம் பார்க்கணுமோ தெரியல. 14 வயதான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்குத்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளத...
No comments:
Post a Comment