மாற்றம் என்பது மாறாததுதான்... ஆனால் அந்த மாற்றத்தையும் எப்படி
வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் உண்டுபண்ணலாம் என்பதற்கு உதாரணம்தான்
இந்த செய்தி!!
பொதுவாக ஜப்பான் நாடு முழுவதுமே பெரும்பாலும் தீவுகள்தான் இருக்கும்.
அப்படி ஒரு தீவுதான் 'ஷிகொக்கு' என்பது. இந்த தீவில் 'நகோரோ' என்ற கிராமம்
இருக்கிறது. ஒரு காலத்தில் பேர் சொல்லும் கிராமம் இது. சுற்றுவட்டார மக்கள்
இங்கு அடிக்கடி வந்து செல்வார்கள். கிராமம் என்றாலும் அடிப்படை வசதிகள்
எல்லாமே இங்கு நிறைந்திருந்தது அப்போது.
மழலை பட்டாளங்கள்
பெரியவர்கள், குழந்தைகள் என கிராமம் எந்நேரமும் கலகலவென்றே இருக்கும்.
ஆனால் காலம் மாற மாற கிராமத்தில் தொழில் முடங்கியது. வறுமை வந்து
சேர்ந்தது. பிழைப்பை தேடி வேறு ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாரானார்கள்.
இளைஞர் பட்டாளங்கள் மற்றும் சிறுவர்கள் என எல்லோருமே கிளம்பி வேலை தேடி
பல்வேறு இடங்களுக்கு செல்ல செல்ல கிராமத்தில் கூட்டம் குறைந்தது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
காலத்தின் கோலம்
மக்கள் நடமாட்டமே தென்படவில்லை. அங்கு இருந்தது பெரும்பாலும் வேலை செய்ய
முடியாத வயதானவர்கள்தான். மிச்சம் மீதி இருந்தது பென்ஷன்தாரர்கள். அதனால்
இவர்களால் அந்த கிராமத்தை விட்டு எங்குமே நகர முடியாத சூழல். இப்படித்தான்
காலத்தின் கோலத்தால் அந்த கிராமத்தை விட்டுசென்றார் அயனோ சுகிமி என்ற பெண்.
67 வயதாகிறது.
ஷாக் ஆன சுகிமி
ஒசாகா நகருக்கு சென்று ஒரு வேலையை தேடி கொண்டு கடுமையாக உழைத்தார்.
இப்படியே பல ஆண்டுகள் சென்றுவிட்டது. ஒருநாள் சுகிமிக்கு தான் பிறந்த
கிராமத்தை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதனால் மிகுந்த ஆர்வத்துடனும்,
ஆசையுடனும், சுகிமி அந்த கிராமத்துக்கு வந்தார். பல்வேறு
எதிர்பார்ப்புகளுடன் கிராமத்தில் காலடி வைத்த சுகிமிக்கு ஷாக் தூக்கி வாரி
போட்டது.
ஆள் அரவம் இல்லை
மக்கள் நடமாட்டமே இல்லாமல், கிராமம் வெறிச்சோடியது... மனித தலைகளை
எங்கேயும் காணோம்... ஆட்களின் சத்தம் தொலைவில் கூட கேட்கவில்லை சுகிமிக்கு.
கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது. ஜனநெருக்கடியில் தடுக்கி
விழுந்து ஓடியாடி விளையாடிய நாட்களை சுகிமி நினைக்க நினைக்க அந்த வேதனையை
அவரால் தாங்கவே முடியவே இல்லை. ஆள் அரவம் இல்லாத தன் கிராமத்தை பார்க்க
சுகிமிக்கு பிடிக்கவே இல்லை. அதனால் ஒரு முடிவுக்கு வந்தார்.
மனித பொம்மைகள்
கிராமத்தில் பார்த்த மனித உருவங்களை மனதில் வைத்துக் கொண்டே நிறைய
பொம்மைகளை தயார் செய்ய தொடங்கினார். அதற்கு அழகழகாக முகங்களை செதுக்கினார்.
கலர் கலராக ஆடைகளை உடுத்திவிட்டார். அதோடு விடவில்லை சுகிமி..
பொம்மையிலேயே பஸ் ஸ்டாப் ரெடி ஆனது. மார்க்கெட் தயாராகிவிட்டது. பஸ்
ஸ்டாப், மார்க்கெட்டுகளை சாலை ஓரங்களில் கொண்டுபோய் வைத்தார். மனித
பொம்மைகளையும் ஆங்காங்கே நிற்க வைத்தார்.
பொம்மை மாணவர்கள்
கிட்டத்தட்ட தான் பார்த்த கிராமம் போலவே இருந்தது. ஆனாலும் என்னவோ ஒரு குறை
சுகிமிக்கு இருந்து கொண்டே இருந்தது. அது வேறொன்றுமில்லை..
பள்ளிக்கூடம்தான்! அப்போது கிராமத்தில் பள்ளிக்கூடம் இருந்திருக்கிறது.
ஆனால் பிள்ளைகள் இல்லாததால் மூடப்பட்டிருந்தது. அதனால் சுகிமி பொம்மை
மாணவர்களை தயார் செய்தார். மாணவர்கள் படிப்பது போல, டீச்சர் பாடம்
நடத்துவதுபோல என தயார் செய்யப்பட்ட பொம்மைகளை அந்த பள்ளி அறைக்குள் கொண்டு
போய் வைத்தார். இப்போதுதான் சுகிமிக்கு திருப்தியானது.
உயிரூட்டினார்
மொத்தம் 350 பொம்மை இதுபோல செய்திருக்கிறார் சுகிமி. இப்போது அந்த
கிராமத்தில் இந்த பொம்மைகள்தான் சுகிமிக்கு மனிதர்கள்... வெறிச்சோடிய
கிராமத்தை தன் கை வண்ணத்தால் பொம்மைகளை உலவ விட்டு உயிரூட்டி வருகிறார்.
இப்போது 29 உயிருள்ள மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் இந்த
கிராமத்தில். இதில் சுகிமியும் ஒருவர்.
நிரம்பி வழிகிறது
இதில் வேடிக்கை என்னவென்றால், மக்களே இல்லாத இந்த கிராமத்தை பொம்மையால்
அலங்கரித்த விஷயத்தை கேள்விப்பட்டு, சுற்றுலா பயணிகள் இந்த கிராமத்துக்கு
வர துவங்கி விட்டார்களாம். அதனால் கிராமமே கூட்டத்தில் நிரம்பி வழிந்து
கொண்டிருக்கிறதாம்.. இதை பார்க்க பார்க்க இரட்டிப்பு சந்தோஷத்தில்
இருக்கிறார் சுகிமி.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில்,...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ..
No comments:
Post a Comment