வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கை தட்டினால் என்ன நன்மை.. பள்ளி மாணவர்களுக்கு சுவாரஸ்ய விளக்கம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

கை தட்டினால் என்ன நன்மை.. பள்ளி மாணவர்களுக்கு சுவாரஸ்ய விளக்கம்!



சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 12.10.2018 அன்று உலக கை கழுவும் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு சென்னை ரோட்டரி கிளப் ஆப் மிராக்கி தலைவர் சிவபாலா ராஜேந்திரன் அவர்கள் தலைமையேற்றார். சென்னை ரோட்டரி கிளப் ஆப் மிராக்கி செயலர் அருள்மொழி இராமநாதன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி கிளப் ஆப் காரைக்குடி ஹெரிடேஜ் துணை ஆளுநர் N. ரவிச்சந்திரன், தேவகோட்டை ரோட்டரி கிளப் ஆப் தலைவர் அமலன் அசோக், சென்னை ரோட்டரி கிளப் ஆப் மிராக்கி யூத் இயக்குனர் பொன்னம்பாள், காரைக்குடி ரோட்டரி கிளப் ஆப் பேர்ல் சங்கமம் துணை ஆளுநர் முத்துக்குமார், காரைக்குடி ரோட்டரி கிளப் ஆப் தலைவர் S.M.பாண்டி கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
இந்நிகழ்வில் காரைக்குடி ரோட்டரி கிளப் பேர்ல் சங்கமம் உறுப்பினர்கள், காரைக்குடி ரோட்டரி கிளப் ஆப் பேர்ல் சங்கமம் உறுப்பினர்கள், ரோட்டரி கிளப் ஆப் ஹெரிடேஜ் உறுப்பினர்கள் மற்றும் காரைக்குடி ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



சென்னை ரோட்டரி கிளப் ஆப் மிராக்கி தலைவர் சிவபாலா ராஜேந்திரன் அவர்கள் தனது சிறப்புரையில் முறையற்ற கை கழுவதால் ஏற்படும் தொற்றுகள் குறித்தும், கை தட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தோப்புக்கரணம் போடுவதால் ஏற்ப்படும் நன்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். சென்னை ரோட்டரி கிளப் ஆப் மிராக்கி செயலர் அருள்மொழி இராமநாதன் அவர்களும், சென்னை ரோட்டரி கிளப் ஆப் மிராக்கி யூத் இயக்குனர் பொன்னம்பாள் அவர்களும் நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்தும், கைக்கழுவும் முறைக்குறித்தும் செய்முறை விளக்கம் அளித்தனர்.
 

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு சோப்பு உதவியுடன் கைக் கழுவும் முறை பயிற்சிக் கொடுக்கப்பட்டது. மேலும் பள்ளி முன்பு மரம் நடுப்பட்டது. விழாவின் இறுதியாக பள்ளி இன்டரக்ட் சங்கத் தலைவர் செல்வன். தரணிதரன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி இன்டரக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் நெகிமியாஸ் ராயன் அவர்கள் செய்திருந்தார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment