இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கருணாஸ் எம்.எல்.ஏ சந்தித்தார்.
பின்னர் மு.க,ஸ்டாலினோ , டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை என கூறினார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. முதல்- அமைச்சர்
எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சித்து
வந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
இந்த நிலையில் கடந்த வாரம் அவரை
போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கோர்ட்டில் ஜாமீன் பெற்று
கருணாஸ் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை வேறொரு வழக்கில் கைது செய்வதற்காக நெல்லை
போலீசார் சென்னைக்கு வந்து முகாமிட்டு அவரது வீடு தேடி சென்றனர். ஆனால் இதை
முன்கூட்டியே அறிந்த கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் உள்ள
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து விட்டார். இதனால் அவரை
போலீசார் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.
CC
கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து பேசி வந்தனர்.தற்போது உடல் நலம் சரியாகிவிட்டதால் ஆஸ்பத்திரியில் இருந்து கருணாஸ் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீட்டுக்கு வந்து விட்டார். இன்று
காலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று
கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 20 நிமிட நேரம்
மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் வெளியே வந்த கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த
அரசு என்னை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்கள்
கூறுகின்றனர். என்னை மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ இயக்கவில்லை. எனது
மனதில் பட்ட கருத்துக்களை நான் கூறிவந்தேன். இதற்காக என்னை பல்வேறு
வழக்குகளில் கைது செய்ய போலீசார் முயன்றனர். சட்டசபை
சபாநாயகர் எந்த பக்கமும் சாயாமல் தராசு முள் போன்று இருக்க வேண்டும்.
ஆனால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதால்தான் அவர் மீது விமர்சனம் எழுகிறது.
என் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நான் தவறு செய்யவில்லை. இவ்வாறு
அவர் கூறினார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத.
No comments:
Post a Comment