இந்தியாவின் முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமான உபர் விரைவில் பறக்கும்
டாக்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தச் சேவையின் மூலம் 200-300 கிலோ
மீட்டாரைக் கூட வெறும் ஒருமணி நேரத்தில் கடந்த செல்லமுடியும் என உபர்
தரப்பில் கூறப்படுகிறது.
உபர் முதலில் தனது பறக்கும் டாக்ஸி சேவையை எங்கு எல்லாம் விரைவில் துவக்க
முடியும் என்று ஆராயிந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாடாகப்
பறக்கும் டாக்ஸ்சி சேவை அளிப்போம் என்று உபர் ஏவியேஷன் பிரிவு தலைவர் எரிக்
அலிசன்ல் தெரிவித்துள்ளார்.
நாடுகள்
உபர் பறக்கும் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வருவதற்கு 5 வருடங்கள் ஆகுமாம்.
தற்போது உள்ளது போலவே மொபைல் செயலி மூலமே பிலைட்டை புக் செய்து பயணம்
செய்யலாம். இது முதல் கட்டமாக இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், பிரேசில்
மற்றும் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ளது.
உணவு டெலிவரி
ஏர் டாக்ஸி சேவை மட்டும் அல்லாமல் இந்தியாவில் ட்ரான் மூலம் உபர் ஈட்ஸஸில்
மெட்ரோ நகரங்களில் உணவும் டெலிவரி செய்யவும் உபர் தனது விருப்பத்தைத்
தெரிவித்துள்ளது.
ஏர் டாக்ஸி
இந்தச் சேவை பயன்படுத்த நீங்கள் உயரமான கட்டிடத்திற்குத் தான் செல்ல
வேண்டும் ஏனென்றால் இந்த டாக்ஸி சேவையை நினைத்த இடத்திற்கெல்லாம் ஆளிக்க
முடியாது. இதனால் தான் இந்தச் சேவை வெறும் மெட்ரோ நகரங்களில் மட்டும்
தொடங்கப்படுகிறது. உபர் நிறுவனம் இந்தச் சேவையை நடைமுறை படுத்த விமான
உற்பத்தி நிறுவனங்களான பெல், போயிங் மற்றும் எம்பரர் உடன் இணைந்துள்ளது.
வேகம்
இந்த வகை உபர் டாக்ஸி மணிக்கு 150-200 மைல் தூரம் செல்லும். தரையில் இருந்து 1000-2000 அடி உயரத்தில் பறக்கும்.
இந்தச் சேவையை விரைவில் இந்தியாவில் துவங்க எந்தெந்த
துறையின் ஒப்புதல் வேண்டுமோ அவர்களுடன் உபர் தொடர்பில் தான் உள்ளது என அவர்
விவரித்தார்.
இந்திய நகரங்கள்
இந்தியாவில் மும்பை,டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் இந்தச் சேவை
தொடங்கப்படவுள்ளது. மேலும் உபர் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில்
இந்த நகரங்களில் ஒரு சில கிலோ மீட்டர் செல்ல பல மணி நேரம் ஆகிறது, அதனால்
இந்தச் சேவை இங்குத் தான் முக்கியத் தேவை. அதுபோக முடிந்த அளவிற்குக்
குறைந்த விலையில் பயணம் செய்ய உபர் வழிவகுத்து வருகிறது என அவர்
தெரிவித்தார்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
இந்திய அரசு
மேலும் அவர் இந்திய அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், அரசு தரப்பிலும்
இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் எனச் சொன்னார். இந்திய அரசும்
போக்குவரத்தில் புதிய பரிணாமத்தை எதிர்பார்த்துள்ளதாம்.
முதல் கட்டம்
முதல் கட்டமாக உபர் கடந்த வருடம் அமெரிக்காவின் டல்லாஸ் போர்ட் மற்றும்
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் இந்த ஏர் டாக்ஸி திட்டத்தை அறிவித்தது. இது
2020-ல் துவங்கப்பட்டு 2023-ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என உபர்
கூறியுள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத...
No comments:
Post a Comment