வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: என் பொண்டாட்டி என்னை கொல்ல பாக்கிறா.. கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற கணவன்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

என் பொண்டாட்டி என்னை கொல்ல பாக்கிறா.. கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற கணவன்



"என் பொண்டாட்டி என்னை கொல்ல பாக்கிறா... அதை நான் சொன்னா யாருமே காதில போட்டுக்கறது இல்லை" என்று சொல்லியவாறே ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள கிராமம் தாதனூத்து. இங்கு முருகன் என்பவர் மனைவி கவிதா, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 38 வயதான முருகன், சங்கர் நகர் பேரூராட்சி கட்டண கழிவறையில் பணியாற்றி வருகிறார்.

உருவான கள்ளக்காதல்
 ஆனால் கவிதா ராஜாவுதுக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் கள்ளக்காதலாக உருவெடுத்தது. இருவரின் சமாச்சாரமும் முருகனுக்கு தெரியவர, கவிதாவை கூப்பிட்டு கண்டித்துள்ளார். ஆனால் கவிதா அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. பலமுறை கெஞ்சியும் பார்த்தார் முருகன். ஆனாலும் ஒன்றும் வேலைக்காகவில்லை.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கொலை செய்ய திட்டம்
 ஒவ்வொரு முறை இந்த பேச்சு எடுத்தாலும் அது சண்டையாகத்தான் போய் முடிந்தது. அதனால் செல்வம், தாழையூத்து போலீசில் சென்று தன் மனைவிக்கு முருகனிடம் உள்ள கள்ளக்காதல் இருப்பதால் அதுகுறித்து வந்து விசாரிக்குமாறும், இருவரும் சேர்ந்து தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள் என்றும் புகார் கொடுத்தார். மேலும் தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் அந்த புகாரில் முருகன் கேட்டிருந்தார்.


செல்வத்திடம் முறையீடு
 ஆனால் போலீஸ் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனிடையே தன்னை தினமும் தன்னை கண்டிக்கிறார், திட்டுகிறார், சண்டை பிடிக்கிறார் என்று கவிதா செல்வத்திடம் போய் முறையிட்டுள்ளார். முருகனிடம், வந்து கொலை மிரட்டல் விடுக்க தொடங்கி உள்ளார்.


கோரிக்கை மனு 
 ஒருபக்கம் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை, மறுபக்கம் கொலை மிரட்டலும் வருவதால் என்ன செய்வதென்றே தெரியாத முருகன் மிகவும் பயந்துவிட்டார். அதனால் நேற்று நேராக நெல்லை கலெக்டர் ஆபீசுக்கு வந்துவிட்டார். அவர் கையில் ஒரு மனு இருந்தது. கலெக்டரை நேரில் பார்த்து தன் மனுவை தரலாம் என்று அதை வைத்திருந்தார்.



கதறி அழுத முருகன்
 ஆனால் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்த முருகன், "எத்தனையோ முறை சொல்லிட்டேன், என் பொண்டாட்டி இன்னொருத்தனுடன் சேர்ந்து என்னை கொல்ல பாக்கிறா என்று. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சொன்னால், போலீசும் கண்டுக்கலை" என்று கதறி அழுதார். பின்னர் திடீரென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். பிறகு தீ வைத்து கொள்ளவும் முயன்றார். ஆனால் அதற்குள் அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் ஓடிவந்து அவரை தடுத்தி நிறுத்தி காப்பாத்தினர். உடனே முருகனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment