வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குழந்தையைக் காப்பாற்ற ஆலங்கட்டி மழையில் அடி வாங்கிய தாய்! - சிலிர்க்க வைத்த போராட்டம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

குழந்தையைக் காப்பாற்ற ஆலங்கட்டி மழையில் அடி வாங்கிய தாய்! - சிலிர்க்க வைத்த போராட்டம்



தன் குழந்தையை, தானே கவசமாக இருந்து ஆலங்கட்டி மழையிலிருந்து காப்பாற்றியுள்ளார் ஒரு தாய். இதனால் அவரது உடல் முழுவதும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.


ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்த ஃபியோனா சிம்ப்சன் தனது குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது கடும் ஆலங்கட்டி மழை பொழிய ஆரம்பித்தது. கார் ஓட்ட முடியாத அளவு மழை பொழிய ஆரம்பித்ததால், வண்டியை ஓரங்கட்டியுள்ளார் ஃபியோனா. தொடர்ந்து பெய்த ஆலங்கட்டி மழை இவரது கார் கண்ணாடியையும் உடைத்துள்ளது.

(தொடர்ச்சிகீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இதனால் பின் சீட்டில் தனியாக இருந்த குழந்தைக்குக் ஆலங்கட்டி பட்டு காயம் ஏற்படும் நிலை உருவானது. உடனே ஃபியோனா பின் சீட்டுக்குத் தாவி, தன் குழந்தையைச் சுற்றி உடலைக் கவசம் போல மூடி உட்கார்ந்துள்ளார். தொடர்ந்து பொழிந்த ஆலங்கட்டி, ஃபியோனாவின் முதுகு, கழுத்து, முகம் என அனைத்தையும் பதம் பார்த்தது.



உடலில் படுகாயம் ஏற்பட்டும், மழை முடியும்வரை ஃபியோனா குழந்தையை விட்டு எழவில்லை. காரில் குழந்தையின் பாட்டியும் இருந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த ஃபியோனா, தன் காயங்களுக்கு நல்ல மருந்து என்ன என்று கேட்டு தனது ஃபேஸ்புக்கில் தனது புகைப்படத்துடன் அனுபவத்தையும் பகிர, உடனே ஆஸ்திரேலிய ஊடகங்கள், இந்த வீரத்தாயை பிரபலமாக்கிவிட்டன.




இனி எப்போதும் புயல் எச்சரிக்கை இருக்கும்போது, ஆலங்கட்டி மழை பொழியும் போது காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல மாட்டேன் என ஃபியோனா கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment