கவர்னர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
விடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்-
பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில்
நேற்று நடைபெற்றது. விடுதலை பத்திரிகை ஆசிரியரும், திராவிடர் கழக தலைவருமான
கி.வீரமணி தலைமை தாங்கினார். விடுதலை பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் வரவேற்றார்.
இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் (முரசொலி பத்திரிகை), இந்திய
கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் (ஜனசக்தி பத்திரிகை),
என்.ராம் (தி இந்து), கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ. (மணிச்சுடர்
பத்திரிகை), எம்.எச்.ஜவாஹிருல்லா (மக்கள் உரிமை பத்திரிகை), அ.குமரேசன்
(தீக்கதிர் பத்திரிகை), பா.திருமாவேலன் (கலைஞர் தொலைக்காட்சி) ஆகியோர்
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால்
பாராட்டப்பட்டார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
எத்தனை
ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு
கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. பொடா, தடாவை
பார்த்தவர். ஜெயலலிதாவையே எதிர்த்தவர் அவர். எடப்பாடி பழனிசாமியை பார்த்தா
பயந்துவிடுவார். கோட்டையில் இருப்பவர்கள் செய்த
ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தேவிக்கு
பயந்து கொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதால், என் மீதும்
வழக்குப்போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
நிர்மலாதேவி
விவகாரத்தில் கவர்னர் பெயரும் அடிபட்டது. இதுகுறித்து சி.பி.ஐ.
விசாரணைக்கு கோரிக்கை வைத்தோம். உடனே கவர்னர் பன்வாரிலால் புரோகித் விசாரணை
கமிஷன் வைத்தார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு 4 மாத காலம் ஆகிறது.
அவருக்கு 8 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில்
ஏதோ நடந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் கோபால் எழுதினார். ஆனால் கவர்னர்
விதிகளை மீறி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.
பா.ஜனதாவை
சேர்ந்த எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து, காவல் துறையை கொச்சைப்படுத்தி
பேசினார். அவரை கைது செய்ய இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை. பெரியார்
சிலையை அடித்து உடையுங்கள் என்று பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் வலம்
வருகிறார். பெண் நிருபர்களை கொச்சைப்படுத்திய பா.ஜனதாவை சேர்ந்த
எஸ்.வி.சேகரையும் கைது செய்யவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் செய்யும்
ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்து கொண்டு
கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
கவர்னரை உடனடியாக
பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
இருக்கிறது. அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத.
No comments:
Post a Comment