வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இதற்காகத்தான் நீக்கப்பட்டாரா தோனி?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 30, 2018

இதற்காகத்தான் நீக்கப்பட்டாரா தோனி?



டி20 போட்டிகளில் இருந்து தோனி நீக்கப்பட்டது ஏன் என்பதற்கான புதிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.


இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, இப்போது ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமீப காலமாக அவரது ஃபார்ம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளிலும் அவர் தடுமாறி வருகிறார். டி20 போட்டியிலும் ரன் குவிக்க திணறி வருகிறார்.
 (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விக்கெட் கீப்பிங் வேலையை செய்வார்கள். இதில் அணியில் இடம் பிடிக்க இருவருக்கும் கடும்போட்டி நிலவும் எனத் தெரிகிறது.



இதுபற்றி பேசிய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ’அடுத்து நடக்க இருக்கிற ஆறு டி20 போட்டிகளில் தோனி விளையாட இல்லை. நாங்கள் 2-வது விக்கெட் கீப்பர் இடத்தை தேர்வு செய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். டி 20-ல் தோனியின் வாழ்வு முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல’ என்று கூறியிருந்தார்.



தோனி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தோனி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த வருடம் நடக்க இருக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஓய்வு பெற்றுவிட்டால், அதற்கு அடுத்த வருடம் அதாவது 2020 -ல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பை டி20 தொடரில் தோனி பங்கேற்க மாட்டார். அவரது இடத்துக்கு மாற்று வீரரை தேட வேண்டியது அவசியம். அதனால் இப்போதே அதற்கான முயற்சியில் இந்திய கிரிக்கெட் அணி இறங்கியுள்ளது. தோனி நீக்கம் குறித்த முடிவு அவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.



இதுபற்றி கேப்டன் விராத் கோலி, துணைக் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரிடம் ஆலோசிக்கப்பட்டது. அவர்களின் சம்மதத்துக்குப் பின்பே, தோனியின் நீக்கம் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சர்வதேச டி20 போட்டிகளில் தோனி இனி திரும்புவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
37 வயதான தோனி, 93 டி20 ஆட்டங்களில் பங்கேற்று 1,487 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 127.09.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment