இறந்து போன மகனை மறக்கவும் முடியாமல், வாழவும் முடியாமல் தவித்து வந்த
பெற்றவர்கள் இறுதியாக தங்கள் முடிவை தேடி கொண்டார்கள்.
குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திருவேங்கடம்
- பரிமளா. இவர்களுக்கு 7 வயதில் நிகேஷ் மற்றும் 3 வயதில் நிகில் என்ற 2
மகன்கள். செய்வது கூலி வேலை என்றாலும் திருவேங்கடம் தன் மகன்கள் மீது
அளவுக்கு மீறி பாசம் வைத்திருந்தார்.
இதில், நிகேஷ் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு
உயிரிழந்து விட்டான். மகன் இறந்ததிலிருந்தே தம்பதி இருவரும் அதிர்ச்சி,
சோகத்திலிருந்து மீளவே இல்லை. எப்போதும் அழுதவாறே இருந்துள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
நிகேஷ் பிறந்தநாள்
அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவர்களை பழைய
மாதிரி மீட்க முடியவில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு இருவரும் சுறுசுறுப்பாக நடமாட
தொடங்கினார்கள். நேற்று முன்தினம் நிகேஷூக்கு 8-வது பிறந்த நாள். மகன்
இல்லையென்றாலும், அவனது பிறந்த நாளை கொண்டாட பெற்றோர் முடிவெடுத்தனர்.
அதிர்ந்தனர்
ஒவ்வொரு வருடமும் நிகேஷ் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுமோ அதுபோலவே இந்த
முறையும் ஏற்பாடுகள் தயாரானது. அவனுக்கு பிடித்த கேக் ஆர்டர் செய்யப்பட்டு,
அவனது பெயரும் பொறிக்கப்பட்டு வாங்கிவரப்பட்டது. நிகேஷுக்கு பிறந்த நாள்
நிகழ்ச்சி என்று அனைவரையும் பெற்றோர் கூப்பிட்டார்கள். இறந்துபோன
நிகேஷூக்கு பிறந்த நாள் கொண்டாட்டமா? என்று அனைவருமே அதிர்ந்தனர்.
நினைவுகளை பகிர்ந்தனர்
இருந்தாலும், நிகேஷ் அனைவருடனும் நன்றாக பழகியவன், அனைவருக்குமே
பிரியமானவன் என்பதாலும் 3 மாதங்களாக நொந்துபோய் இருக்கும் பெற்றோர்
கூப்பிட்டதாலும், தெரிந்தவர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என
ஏராளமானோர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருமே
நிகேஷை பற்றி பேச ஆரம்பித்தனர். எல்லோருமே தங்களுடனான நினைவுகளை
நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். பிறகு கேக் வெட்டி அனைவருக்கும்
தரப்பட்டது. எல்லோரும் சாப்பிட்டு கிளம்பிவிட்டார்கள்.
ஆளுக்கு ஒரு கயிறு
இதன்பிறகு நிகேஷின் நினைவுகள் மேலும் பெற்றோரை அழுத்தியது. அதனால்
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதன்படி,
வீட்டை தாளிட்டு கொண்டனர். 3 வயது மகன் நிகிலை ஹாலுக்கு அழைத்து சென்று
அவனை தூக்கில் மாட்டி கொலை செய்தனர். பிறகு ஆளுக்கு ஒரு தூக்கில்
தனித்தனியாக தற்கொலை செய்து கொண்டு தொங்கினர். பிறந்த நாள் கொண்டாடியவர்கள்
வெளிக்கதவை மறுநாள் காலை திறக்காததால் அருகில் இருந்தோருக்கு சந்தேகம்
வந்தது.
விசாரணை
அதனால் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர்
இருதயராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, 3 சடலங்கள்
தூக்கில் தொங்கியது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார்
வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேக், இனிப்பு அனைவருக்கும்
வழங்கிய தம்பதி இப்படி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த
பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில்,...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ..
No comments:
Post a Comment