வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஒடிசா புயலில் பலி- மகள் உடலை 8 கிலோ மீட்டர் தூக்கி சென்ற தந்தை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

ஒடிசா புயலில் பலி- மகள் உடலை 8 கிலோ மீட்டர் தூக்கி சென்ற தந்தை



ஒடிசாவில் டிட்லி புயலில் சிக்கி பலியான 7 வயது மகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தந்தை 8 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசாவில் கடந்த 11-ந்தேதி டிட்லி புயல் கடுமையாக தாக்கியது. கஜபதி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. லட்சுமிபூர் பஞ்சாயத்தில் உள்ள கதாங்பூர் கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர்.  இந்த நிலையில் அதாங்பூர் கிராமத்தை சேர்ந்த முகுந்த் டோரா என்பவரது 7 வயது மகள் பபிதாவை காணவில்லை. எனவே அவளை அவர் தேடி வந்தார். இந்த நிலையில் நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த அவளது உடல் சமீபத்தில் மீட்கப்பட்டது. (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!


அவளது உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆம்புலன்சை போலீசார் ஏற்பாடு செய்யவில்லை. புயல் மற்றும் நிலச்சரிவினால் சாலை சேதமடைந்துள்ளது. அதை காரணம் காட்டி பிரேத பரிசோதனைக்காக இறந்த பபிதாவின் உடலை கானிபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரும்படி தெரிவித்தனர்.  ஏழையான முகுந்த் டோராவினால் ஆம்புலன்சோ, வேறு வாகனமோ ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே மகளின் பிணத்தை ஒரு சாக்குப் பையில் போட்டு கட்டி தோளில் சுமந்தபடி 8 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றார்.



வழியில் லட்சமிபூரில் அவரை வழிமறித்து நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது இந்த தகவலை அவர் தெரிவித்தார். அதன் பின்னர் போலீசார் ஒரு ஆட்டோவை பிடித்து அதன் மூலம் உடலை கானிபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கஜபதி மாவட்ட கலெக்டர் அனுபம் ஷாவுக்கு தெரிய வந்தது. இதற்கு வருத்தம் தெரிவித்த அவர் இது குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக கூறினார். மேலும் புயல் மழையால் உயிரிழந்த பபிதாவுக்காக அவரது தந்தை டோராவிடம் ரூ.10 லட்சம் காசோலையையும் அவர் வழங்கினார்.



மத்திய மந்திரி தர்மேந்திரா பிரதான் ஒடிசாவில் புயல் பாதித்த கஜபதி மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது, அவரிடம் தனது மகள் உடலை 8 கி.மீ. தூரம் சுமந்து சென்ற தந்தை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இச்சம்பவம் வேனை அளிக்கிறது என்றார். கடந்த 2016-ம் ஆண்டு ஒடிசா அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் தரவில்லை. எனவே ஏழை மலைவாழ் மனிதர் தனமாஜி தனது மனைவியின் உடலை 10 கி.மீ. தூரம் சுமந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.  

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment