பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம், ஜைனப் அன்சாரி (வயது 7) என்ற சிறுமி திடீரென மாயமானாள். சிறுமி மாயமானது பற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்த போது, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். உடற்கூறு ஆய்வில், அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. (தொடர்ச்சி கீழே...)
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம், ஜைனப் அன்சாரி (வயது 7) என்ற சிறுமி திடீரென மாயமானாள். சிறுமி மாயமானது பற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்த போது, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். உடற்கூறு ஆய்வில், அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
இது கசூர் மக்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவம்
குறித்த தகவல் அறிந்ததும், சிறுமி ஜைனப்பின் பெற்றோர் சவுதி அரேபியாவில்
இருந்து நேற்று முன்தினம் ஊர் திரும்பினார்கள். அதைத் தொடர்ந்து சிறுமியின்
உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும்
இந்த சம்பவத்தில் நீதி வழங்கக்கோரி உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு
அங்குள்ள போலீஸ் நிலையத்தையும், துணை கமிஷனர் அலுவலகத்தையும் முற்றுகையிட
சென்றனர்.
அவர்களின் போராட்டத்தில் கலவரம்
மூண்டது. போலீஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். துணை
கமிஷனர் அலுவலகத்தை சூறையாட முயன்றனர். அப்போது அவர்களுக்கும்,
போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீசார்
துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.போராட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது நட
ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த
சம்பவம் தொடர்பாக இம்ரான் அலி (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ஆட்கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை, பயங்கரவாத வழக்கு பதிவு
செய்யப்பட்டது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக
தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று லாகூர் நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. இம்ரான் அலி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், 3 மரண தண்டனை விதித்து தீர்ப்பு
அளித்தது.
இன்று அதிகாலை குற்றவாளி இம்ரான்
அலிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. லாகூர் கோட் லோக்பாத் சிறைசாலையில்
இந்த தண்டனை நிறைவேற்றபட்டது. இந்த தண்டனையின் போது மாஜிஸ்திரேட் அதில்
சர்வார் மற்றும் ஜைனப்பின் தந்தை முகமது அமீனும் இருந்தனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக கூகுள் மேப் துல்லியமாக...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
-
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச...
No comments:
Post a Comment