வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உங்களுக்கும் வேண்டுமா? வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 17, 2018

உங்களுக்கும் வேண்டுமா? வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே



வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது தயாரிப்புகளில் எதிலெல்லாம் புதுமைகள் புகுத்த வாய்ப்புள்ளதோ, அதை சரிவர பயன்படுத்தி புதிய அறிமுகங்களை தொடர்ந்து செய்து வருகிறது, இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம்.
 இப்போது தனது ஸ்கூட்டர் மாடலில் ஜூபிடர் ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பம்சங்களை சேர்த்து ‘ஜூபிடர் கிராண்டே, என்ற பெயரில் 5-வது தலைமுறை (5ஜி) ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய வண்ணங்களில் வெளிவந்துள்ள இதன் முகப்பு விளக்கில் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் லைட் நீல நிலத்தில் வந்துள்ளது. பின்புறம் அமர்வோர் பிடித்துக் கொள்ள வசதியாக ஒரு கிரிப், கண்ணாடியில் குரோம் டிசைன், மொபைல் சார்ஜிங் வசதி ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும்.
(தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!
முன் சக்கரத்தில் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் வசதியோடு இவை வெளிவந்துள்ளன. ஷாக் அப்சார்பரை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் இதில் உண்டு. 109.7 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. 8 பி.ஹெச்.பி. மற்றும் 8 நியூட்டன் மீட்டர் திறனை வெளிப்படுத்தக் கூடியது. தற்போது வந்துள்ள மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை ரூ. 53,544. இந்த புதிய மாடலை, ரூ. 5 ஆயிரம் செலுத்தி முன் பதிவு செய்யலாம்.

ஸ்கூட்டர் மாடலில் ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்து அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஜூபிடர் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் தற்போது பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி மக்கள் பெருமளவில் விரும்பும் மாடலாகியுள்ளது. ஏற்கனவே ஸ்டார் சிட்டி பிளஸ் அறிமுகம் செய்த சில வாரங்களிலேயே ஜூபிடரின் மேம்படுத்தப்பட்ட ரகமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment