வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: “இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

“இனி என்னுடைய 50 வயதில் சபரிமலை வருவேன்,” -சபரிமலையில் தமிழக சிறுமி பதாகை



“இனி என்னுடைய 50 வயதில்தான் சபரிமலை வருவேன்,” என சபரிமலையில் 9 வயது தமிழக சிறுமி பதாகை ஏந்திசென்றார்.



பக்தர்களின் சரண கோஷங்களால் ஜொலிக்கிற சபரிமலை அய்யப்பன் கோவில், இப்போது போராட்ட களமாக மாறி இருக்கிறது. இதுவரை இருந்து வந்த நடைமுறைக்கு மாறாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!



 ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட கோவிலுக்கு பெண்கள் செல்ல முயற்சி செய்துவருகிறார்கள். பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டம் நடைபெறுகிறது, அதனால் அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.


இதற்கிடையே கோவிலுக்கு செல்லும் சிறுமிகள் மற்றும் வயதான பெண்கள் இதுபோன்ற முயற்சிகளை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். மதுரையிலிருந்து சபரிமலைக்கு சென்ற சிறுமி ஜெனனி கோவிலுக்கு செல்லும் போது வைத்திருந்த பதாகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
 “என்னுடைய 50 வயதிற்கு பின்னர்தான் சபரிமலைக்கு இனி நான் வருவேன்,” என வாசகம் தாங்கிய பதாகையை வைத்திருந்தார். அவருடைய தந்தை பேசுகையில், “எங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எல்லாம் எங்களுக்கு தெரியாது. என்னுடைய மகளுக்கு இப்போது 10 வயது ஆகிறது, இனி 50 வயது வரையில் காத்திருப்பார். பின்னர் வந்து அய்யப்பனை வந்து தரிசனம் செய்வாள்,” என கூறியுள்ளார். 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment