தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 50 கோடி மக்களிடம் ஆதாருக்கு பதில்
புதிய ஆதாரங்களை கேட்க முடிவெடுத்து இருக்கிறது.
அரசின் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமா என்ற வழக்கில் கடந்த சில
நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பின்படி அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயமாகிறது. ஆனால் தனியார்
நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்று நீதிபதிகள்
கூறியுள்ளனர்.
மொபைல் நிறுவனங்கள்
இனி தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை மக்கள் அளிக்க வேண்டிய அவசியம்
இல்லை என்று தீர்ப்பளித்துள்ளனர். ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு
நீக்கப்பட்டது. இதன் காரணமாக இனி மொபைல் நிறுவனங்கள், சிம் கார்ட்
நிறுவனங்கள் என யாரும் ஆதார் விவரங்களை கேட்க முடியாது. கட்டாயம் ஆதாரை
அளிக்க வேண்டும் என்று கோர முடியாது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
நீக்கிவிட்டார்
இதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ''டேட்டா பேசில்''வைத்து
இருந்த ஆதார் விவரங்களையும் நீக்க வேண்டும். இதை 6 மாதத்திற்குள் செய்ய
வேண்டும். இதை இப்போதே சிம் கார்ட் நிறுவனங்கள் செய்ய தொடங்கிவிட்டது.
ஆதார் கொடுத்து சிம் வாங்கியவர்களின் ஆதார் விவரங்கள் அனைத்தும்
அழிக்கப்பட்டு வருகிறது.
மாற்ற வேண்டும்
இதனால் ஆதார் விவரம் கொடுத்து சிம் வாங்கியவர்கள் எல்லாம் தங்களது சிம்
எப்போதும் போல இயங்க வேண்டும் என்றால் வேறு ஆதாரம் கொடுக்க வேண்டும்.
வாக்காளர் அட்டை, லைசன்ஸ் உள்ளிட்ட ஆதாரங்களை அளிக்க வேண்டும். இதன்
காரணமாக மொத்தம் 50 கோடி பேர் புதிய ஆதாரங்களை அளிக்க வேண்டும். இந்த 50
கோடி பேருக்கும் விரைவில் இதுகுறித்து தகவல் அளிக்கப்படும்.
யார் யார்
அதே சமயம் ஆதார் வருவதற்கு முன்பே சிம் வாங்கியவர்கள் கவலை கொள்ள வேண்டியது
கிடையாது. அவர்கள் முன்பு கொடுத்த ஆதாரங்களை எப்போதும் போல சிம்
நிறுவனங்கள் பயன்படுத்தும். வெறும் ஆதார் விவரம் மட்டும் கொடுத்து
இருப்பவர்கள் மட்டும் இனி புதிய புரூஃப் கொடுக்க வேண்டும்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்...
-
கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக கூகுள் மேப் துல்லியமாக...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச...
-
செக்ஸ் தொல்லை தாங்காமல் ஆண் தற்கொலை மகராஷ்டிராவில் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு பெண் ஒருவர் தொல்லை கொடுத்ததால் திருமண...
No comments:
Post a Comment