வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தூங்குனியா..? ஆமாங்க... வெரி குட் இந்தா 40 ஆயிரம் ரூபாய் போனஸ்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

தூங்குனியா..? ஆமாங்க... வெரி குட் இந்தா 40 ஆயிரம் ரூபாய் போனஸ்..!



தம்பி என்ன குடிச்சிட்டு கட்டுரை எழுதுனீயான்னு கேக்காதீங்க. உண்மை தாங்க. நல்லா தூங்குனவனுக்கு அந்த கம்பெனி முதலாளி 40,000 ரூபாய் போனஸ் கொடுத்திருக்காரு. கொடுத்து வெச்சிவங்க இல்ல.


எங்கே 
எல்லாத்தையும் வித்தியாசமா செய்யுற, பூகம்ப பூமியான நம்ம ஜப்பான் காரங்க தான், தூங்குறவனுக்கு 64,000 ஜப்பானிய யென் போனஸை கொடுத்திருக்காங்க. இந்த கான்செப்ட இப்ப பல ஜப்பானிய நிறுவனங்கள் அவங்களோட அலுவலகங்கள்ளயும் செய்ய முன் வந்திருக்காங்க.
(தொடர்ச்சி கீழே...) 


இதையும் படிக்கலாமே !!!
நிறுவனம்
 Crazy Inc.-ங்குற நிறுவனம் ஜப்பான்ல கல்யாணங்களை திட்டமிட்டு நடத்திக் கொடுக்குற ஒரு ஈவெண்ட் மேனேஜர். இந்த நிறுவனம் தான் ஜப்பான் இளைய தலைமுறை கிட்ட இருக்குற பிரச்னைங்கள எல்லாம் பாத்து பட்டியலிட்டு இருக்காங்க. அதுக்கு முதல் தீர்வா தூங்குறவனுக்கு 64000 ஜப்பானிய யென் போனஸை அறிவிச்சிருக்காங்க.



பிரச்னை பட்டியல் 
 ஜப்பான்ல 20 வயதுக்கு மேற்பட்ட 92 சதவிகித இளைஞர்கள் வேலை வேலைன்னு இரவு நேரங்கள்ள கூட ஒழுங்கா தூங்குறது இல்ல. ஜப்பானிய இளைஞர்கள் (ஆண் / பெண்) மத்தியில உடல் உறவு கொள்ற ஆசையே இல்லாம போய்க்கிட்டு இருக்கு, ஒரு பக்கம் ஜப்பான்ல முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிச்சிக்கிட்டு வருது. சரிவிகித சத்தான உணவுகளை சாப்பிடுறது இல்ல. அதிக வேலைப் பளு காரணமா தற்கொலைகள் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டு இருக்கு... இந்த மாதிரி இன்னும் சில பிரச்னைகள் இருக்கு


தீர்வு
 இந்த மாற்றத்துக்கு முதல் படியா Crazy Inc. நிறுவனத்துல வேலை பாக்குறவங்க யாராக இருந்தாலும் (வாட்மேன் தொடங்கி எம்டி வரை) வாரத்துக்கு ஐந்து நாள் இரவு குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஒழுங்கா தூங்குனா 40,000 இந்திய ரூபாய் (570 டாலர் அல்லது 64,000 ஜப்பானிய யென்) போனஸா கொடுக்கப்படும்ன்னு அறிவிச்சி கொடுத்துக்கிட்டு இருக்காங்க.



எப்புடி கண்காணிப்பாங்க
 Airweave Inc.-ங்குற மெத்தைகளை தயாரிக்கும் ஒரு ஜப்பானிய நிறுவனம் இதற்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கு. இவங்க தயாரிச்சிருக்குற ஒரு அப்ளிகேஷன் ஒரு மனிஷன் எவ்வளவு நேரம் ஒழுங்கா தூங்குறான்னு கணக்கிட்டுச் சொல்லும். அதன் அடிப்படையில தான் இந்த 64,000 ஜப்பானிய யென் போனஸை அலுவலகம் கன்ஃபார்ம் பண்ணும்.


ஏன் தூக்கம்
 ஏங்க எவ்வளவோ பிரச்னை இருக்குறப்ப எதுக்கு தூக்கப் பிரச்னையை மொதல்ல கையில எடுத்திருக்கீங்கன்னு கேட்டு இருக்காங்க ஜப்பானிய பத்திரிகையாளர்கள். அதுக்கு அந்த நிறுவனம் "ஒரு மனிஷனோட சரியான தூக்கம், அவன சரியா வேலை பாக்க வைக்கும், அவன் நல்லா வேலை பாத்தா கம்பெனி வளரும். உலகத்துலேயே தூக்கக் குறைபாடு காரணமாக அதிக பொருளாதார இழப்பு சந்திக்கிற நாட்டுல ஜப்பானுக்கு 2-வது இடம். ஜப்பானிய பொருளாதாரம் சுமார் 138 பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்கிது. இதெல்லாம் பொருளாதார பக்கங்கள். அறிவியல் ரீதியா, தூக்கம் மனிதனோட பல பிரச்னைகளுக்காக மருந்து. அதனால தான் தூக்கப் பிரச்னைய மொதல்ல எடுத்திருக்கோம்" என Crazy Inc. தெரிவித்திருக்கிறார்கள்.



போனஸ் ரொக்கமா?
 நாம தீபாவளி மைண்ட் செட்ல போனஸ் வரும்-ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கக் கூடாது. ஜப்பான் காரங்க கொடுக்குற போனஸ் ஜப்பானிய யென்களை வெளியில செலவு பண்ண முடியாது. 64,000 ஜப்பானிய யென்னுக்கு அலுவலக கேண்டின் டோக்கன் தந்திடுவாங்க. அத பயன்படுத்தி சாப்டுக்களாம். அட்லீஸ்ட் அதாவது அந்த கம்பெனி தருதேன்னு சந்தோஷப் படுறீங்களா...?


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment