மதுரை அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது கார்
மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்தி, கொள்ளுப்பேரன் ஆகிய 4
பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள வடிகப்பட்டி பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தன் மனைவி மரத்தி (வயது 60). இவரது மகள் லெட்சுமி (45). இவருக்குத் திருமணமாகி வசந்தி (22) என்ற மகள் உள்ளார். இவரை அதே பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.(தொடர்ச்சி கீழே...)
இவர்களுக்கு அத்விக் என்ற 8 மாத கைக்குழந்தை உள்ளது. மரத்திக்கும், அத்விக்கிற்கும் உடல்நிலை சரியில்லாததால், தாய், மகள், பேத்தி, கொள்ளுப்பேரன் ஆகியோர் குடும்பமாக இன்று (சனிக்கிழமை) காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து மதுரை-சேலம் நான்கு வழிச்சாலைக்கு நடந்து வந்துள்ளனர். சாலையைக் கடந்து எதிர்புறம் மதுரை செல்வதற்கான பேருந்து நிறுத்திற்குச் சென்றுள்ளனர். பேருந்துக்காக சிறிது நேரம் காத்திருந்தனர்.

இதையும் படிக்கலாமே !!!
|

அப்போது, மதுரையிலிருந்து கோவையை நோக்கிச் சென்ற கார், திடீரென்று
தாறுமாறாக ஓடி பேருந்து நிறத்தத்தில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில்
கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே லெட்சுமியும், அவரது தாய் மரத்தியும்
பரிதாபமாக உயிரிழந்தனர். வசந்தியும், கைக்குழந்தை அத்விக்கும் படுகாயம்
அடைந்து உயிருக்குப் போராடினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு
வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர்களும்
இறந்துவிட்டனர். அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்
தப்பினர். தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், வடுகப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே கார் வந்தபோது காரின் இடதுபக்கம் முன் டயர் பஞ்சராகிவிட்டது. பஞ்சாரானதால் கார் நிலைதடுமாறி அவர்கள் மீது மோதியது தெரியவந்துள்ளது. பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்தி, கொள்ளுப்பேரன் ஆகியோர் கார் மோதி பலியான இந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில்,...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
No comments:
Post a Comment