வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்கக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்கக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி



ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 


 ஆண்களின் திருமண வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அசோக் பாண்டே என்பவர் பொதுநல மனு தாக் கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!
18 வயது நிரம்பிய ஆண்கள் ராணுவத்தில் சேரவும், தேர்தல்களில் வாக்களிக்கவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. எனவே ஆண்களின் திருமண வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.


தள்ளுபடி

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘50 வயதுக்கு மேல் ஆகியுள்ள மனுதாரருக்கு இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய முகாந்திரம் ஏதும் இல்லை. யாரேனும் 18 வயது நிரம்பிய ஒருவர் தனக்கு அந்த வயதில் திருமணம் செய்துகொள்ளவும், அத்திருமணத்தை பதிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தால் அதுபற்றி விசாரிக்கப்படும்’.


இவ்வாறு கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனு தாக்கல் செய்த அசோக் பாண்டேவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment