ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ5 லட்சம் வரதட்சணை கொடுக்காத மருமகள்களை ரூ1.50
லட்சத்திற்கு விற்பனை செய்த மாமனார் மற்றும் மாமியார் உட்பட 9 பேர் மீது
வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த நிர்மலா, சர்மிளா ஆகிய இரு சகோதரிகளும் மும்பை
அருகில் உள்ள விராரைச் சேர்ந்த சகோதரர்கள் சஞ்சய் ராவல் மற்றும் வருண்
ராவல் ஆகிய இரண்டு பேருக்கும் 2015ம் ஆண்டு திருமணம் செய்து
வைக்கப்பட்டனர். திருமணமான ஆறு மாதத்தில் அவர்களிடம் கணவன் வீட்டார் ரூ.9
லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்தனர். அவர்கள் தங்களது
பெற்றோரிடம் சொல்லி ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தனர்
ஆனால் மேலும் ரூ 5 லட்சம் வாங்கி வரும்படி
கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்தனர். ஆனால் அவர்கள் வரதட்சணை வாங்கி
வரவில்லை. இதனால் இரண்டு மருமகள்களையும் கணவன் வீட்டார் அடித்து உதைத்து
சித்ரவதை செய்தனர். அதோடு அப்பெண்கள் இரண்டு பேரையும் ராஜஸ்தானில் உள்ள
பிந்த்வாரே நகருக்கு அழைத்து சென்று அங்கு அடைத்து வைத்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
10
நாட்களுக்கு பிறகு அப்பெண்கள் இருவரையும் மும்பைக்கு அடையாளம் தெரியாத
ஒருவருடன் அனுப்பிவைத்தனர்.அந்த நபர், ‘‘உங்களை ரூ1.50 லட்சத்திற்கு
விலைக்கு வாங்கி உள்ளேன். அதனை வசூலிக்கும் வரை விடமாட்டேன்’’ என்று
தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்கள், அந்த நபரிடம்
இருந்து தப்பித்து வந்து, போலீசில் புகார் அளித்துள்ளனர். அப்பெண்களின்
கணவன்கள், மாமனார் மோகன்லால், மாமியார் லீலாதேவி மற்றும் உறவினர்கள் 12
பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
No comments:
Post a Comment