பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில்
பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு
அசாமில் கோல்பாரா என்ற மாவட்டத்தில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
15 வயது சிறுவன் ஒருவனை படிக்க பள்ளிக்கூடம் அனுப்பினார்கள் அவனது
பெற்றோர். ஆனால் படிப்போ சரிவர அவனுக்கு ஏறவில்லை. அதனால் கட்டிட வேலையாவது
செய்யட்டும் என்று அந்த வேலைக்கு அனுப்பினார்கள்.
தவறான எண்
கட்டிட வேலையை பார்த்து வந்த சிறுவனுக்கு நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள்.
இப்படித்தான் ஒரு மாசத்துக்கு முன்னாடி, ஒருநாள் வேலையை சீக்கிரமாகவே
முடித்துவிட்டார். அதனால் தன் நண்பர்களிடம் போனில் பேசலாம் என்று
செல்போனில் நம்பரை போட்டார். ஆனால் நண்பனுக்கு பதிலாக வேறு ஒரு எண்ணிற்கு
போய்விட்டது. ஒரு பெண்தான் போனை எடுத்தார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
தொடர்ந்து பேசினார்
தவறான எண் என அந்த பெண் கூறியும் சிறுவனால் போனை கட் செய்ய முடியவில்லை.
காரணம், அந்த குரலில் அப்படி ஒரு இனிமை.. குரலை கேட்க கேட்க சிறுவனுக்கு
என்னென்னமோ ஆனது. அதனால் அடிக்கடி அந்த பெண்ணுடன் செல்போனில் பேச
தொடங்கினான். அந்த பெண்ணும் சிறுவனுடன் தொடர்ந்து பேசினார்.
பிரம்மபுத்திரா நதிக்கரை
ஒரு கட்டத்தில் அந்த குரலை கேட்காமல் சிறுவனால் இருக்கவே முடியவில்லை.
இப்படியே நாட்கள் ஓடியது. ஒருநாள் இருவரும் நேரில் பார்க்கலாம் என்று
முடிவு செய்தனர். அதற்காக பிரம்மபுத்திரா நதிக்கரை ஓடும் சுக்குவாஜார்
கிராமத்தில் சந்திப்பதென இடத்தையும் தேர்ந்தெடுத்து கொண்டனர்.
உறைந்த சிறுவன்
அதன்படியே சிறுவன் அந்த இடத்திற்கு ஓடோடி சென்றான். இனிமையான குரலுக்கு
சொந்தமானவரை காண ஆர்வத்துடன் காத்திருந்தான். அந்த குரலுக்கு உரிமையானவர்
எப்படியெல்லாம் இருப்பார் என கனவுகள், கற்பனைகள் ஒருபக்கம் ஓட ஆரம்பித்தது.
தேன் போன்ற குரலுக்கு சொந்தக்காரரும் அங்கு வந்து நின்றார். ஆனால்
காத்திருந்த சிறுவன் விக்கித்து உறைந்து ஷாக்காகி போய் நின்றான்.
சிறுவன் அதிர்ச்சி
காரணம், வந்து நின்றது 60 வயது பாட்டி. ஆனால் இதைவிட அதிர்ச்சி,
இருவருக்கும் மூதாட்டியின் குடும்பத்தினர் கல்யாணம் செய்து வைக்க முயற்சி
நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கணவனை இழந்த பாட்டியிடம் கேட்டபோது,
"அவரது பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை என் உயிர் நண்பராகவே
நினைக்கிறேன், திருமணம் செய்ய நினைக்கவில்லை" என்கிறார்.
சிறுவனின் நிலை
என்றாலும், குழந்தைகள் உரிமைகளுக்கான மாநிலப் பாதுகாப்பு ஆணையம் இந்த
சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. ஒருவேளை இது சம்பந்தமாக புகார்
வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. ஆனால்
விக்கித்து நின்ற சிறுவனின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது என்று யாருமே
எதுவுமே சொல்லவில்லை!!
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போது மீடு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். பல பெண்களும் வைரமுத்து மீது பா...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
-
துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில்,...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார். பள்ளிக்...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
No comments:
Post a Comment