வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வரும் கல்வி ஆண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை புதிய வண்ண சீருடை அறிமுகப்படுத்தப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 04, 2018

வரும் கல்வி ஆண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை புதிய வண்ண சீருடை அறிமுகப்படுத்தப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு



வரும் கல்வி ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புதிய வண்ண சீருடை அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
எல்மோ என்ற ஜப்பானிய நிறு வனம் அரசுப் பள்ளிகளில் இலவ சமாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை அமைத்துக் கொடுக்க முன்வந்துள் ளது. அந்த வகையில், முதல்கட்ட மாக சென்னை உட்பட 5 இடங் களில் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை நிறுவியுள்ளது.

மாதிரிப் பள்ளியாக அறிவிக்கப் பட்டுள்ள எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எல்மோ சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட் டையன் நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் பேசும்போது அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மாதிரிப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை இலவசமாக அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ள எல்மோ நிறுவனத்தைப் பாராட்டுகிறேன். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பச்சை வண்ண புதிய சீருடையும், அதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பழுப்பு வண்ண சீருடையும் அறிமுகப் படுத்தப்படுகிறது.


 
கணினிமயமாக்கல்
நவம்பர் இறுதிக்குள் 3,000 நடு நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு ஏற்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட மாக 9 முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகள் இணைய வசதியுடன் கணினிமயமாக்கப்படும். பள்ளி மாணவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகை யில் புதிய திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.
அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை அறிவித் துள்ளோம். இந்தத் திட்டத்தின் கீழ் உதவி செய்ய முன்வருவோர் தேவையான தகவல்களைப் பெறு வதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவல கத்திலும் மூத்த ஆசிரியர் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.


 
திறன் மேம்பாடு
இந்தக் கல்வி ஆண்டில் 1,6, 9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டது. எஞ்சியுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப் படும். மாணவர்கள் பிளஸ் 2 முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடத் திட் டத்தில் திறன் மேம்பாடு தொடர் பான பாடங்கள் சேர்க்கப்பட உள் ளன. இவ்வாறு அவர் கூறினார்.
விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன்துறை அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி வாழ்த்திப் பேசும் போது, பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்பட்டு வரும் புதிய திட்டங் களுக்கு பாராட்டு தெரிவித்தார்.



விழாவில், எல்மோ நிறுவன முதுநிலை துணைத் தலைவர் சிஞ்சி அசானோ, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாநில இயக்குநர் சுடலை கண்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், இணை இயக்குநர் (பணியாளர்) குப்புசாமி, தொடக் கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திருவளர்செல்வி, எஸ்.ஆர். விஜயகுமார் எம்பி, பள்ளியின் தலைமை ஆசிரியை கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Popular Posts

No comments:

Post a Comment