எச் ராஜா தலைமறைவா.. எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா என செய்தித்தாளை காண்பித்து பாஜக நிர்வாகி ஒருவர் போலீஸுக்கே சவால் விடும்படி பேசினார்.
புதுக்கோட்டையில் திருமயம் என்ற பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயத்துக்கு பக்கத்தில் மேடை போட போலீஸார் அனுமதி தரவில்லை. இதனால் எச் ராஜா வெகுண்டெழுந்தார்.
இதையடுத்து போலீஸாரை மிகவும் கேவலமாக விமர்சனம் செய்தார். அப்போது உயர்நீதிமன்றம் உத்தரவு நாங்கள் என்ன செய்ய என கேட்ட போலீஸாரை ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது என்றதோடு கெட்ட வார்த்தையும் பேசினார்.
தலைமறைவு
இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதாலும் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டதாலும் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
பண்ணை வீட்டில் உலா
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் அவரது பண்ணைவீட்டில் இருந்து காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9-ஆவது வீதியில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி
விநாயகர் சதுர்த்தி விழா
இதையடுத்து அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடந்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார்.
கண்ணுக்கு தெரியுதா
அப்போது ஒரு செய்தித்தாளில் 'தலைமறைவானார் எச் ராஜா' என்ற முதல் செய்தியை காண்பித்து பாஜக நிர்வாகி ஒருவர் போலீஸாருக்கு சவால் விடும் தொனியில் பேசினார். அவர் கூறுகையில் எச் ராஜா தலைமறைவா, எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா. உன் கண்ணுக்கு தெரியுதா.சவால் விட்ட பாஜக நிர்வாகி
இந்துக்களின் ஒருங்கிணைந்த ஒரே குரல் எச் ராஜாதான். அவர் சிங்கம் மாதிரி இங்க உட்காந்திருக்காரு, தலைமறைவுனு போட்டு இருக்கீங்களே உங்களுக்கு அசிங்கமாக இல்லையா. லட்சக்கணக்கான தொண்டர்கள் இங்க இருக்கோம். எங்கள் உயிர்களை தாண்டிதான் உங்களால் எச் ராஜாவை கைது செய்ய முடியும் என்று பேசினார்.
No comments:
Post a Comment