வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ‘என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்’ - பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கதறி அழுத பேராசிரியர் Nirmaladevi latest news
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, August 29, 2018

‘என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்’ - பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கதறி அழுத பேராசிரியர் Nirmaladevi latest news



அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் முருகன், சிறையில் அடைத்து வைத்து தற்கொலைக்குத் தூண்டி எனது வாழ்க்கையை முடிக்கப் பார்க்கிறார்கள் என நீதிமன்ற வளாகத்தில் கதறினார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.



"அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர் மொபைல் போனில் மாணவிகளிடம் பாலியல்ரீதியில் பேசியதாக ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய முருகன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு விசாரணை விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெறுகிறது.

நீதிமன்றக் காவல் நீட்டிப்புக்காக நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களது காவலை செப்டம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி உத்தரவிட்டார். ஆனால், அன்றைய தினம் இமானுவேல் சேகரன் நினைவு தினம் என்பதால் போலீஸார் பாதுகாப்புப் பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையை நீதித் துறை நடுவரிடம் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து செப்டம்பர் 10-ம் தேதி வரை 3 பேருக்கும் காவல் நீட்டிப்பு செய்து நீதித் துறை நடுவர் திலகேஸ்வரி உத்தரவிட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த முருகனை அவரது தாய் சோலையம்மாள், சகோதரி ஆகியோர் சந்தித்து கதறி அழுதனர். அப்போது, தான் குற்றம் செய்யவில்லை. சாமியை வேண்டிக் கொள்ளுங்கள் என்றார். மேலும், "நான் 120 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இது மனித உரிமை மீறல். நான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க எனக்கு நீதிமன்றத்தில் வாதாட வாய்ப்பு வழங்க வேண்டும். சிறையில் என்னை அடைத்து வைத்து தற்கொலைக்குத் தூண்டி எனது வாழ்க்கையை முடிக்கப் பார்க்கிறார்கள்" என ஆவேசத்துடன் கூறினார். இதனால், விருதுநகர் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து மூவரும் மதுரைக்கு அழைத்துச் செல்லப் பட்டு மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


No comments:

Post a Comment