வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்' - Kerala's special temporary emergency flood power bank
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, August 21, 2018

கேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்' - Kerala's special temporary emergency flood power bank


   இன்ஜினியரிங் மாணவர்கள் உருவாக்கிய, 'எமர்ஜென்சி பவர் பேங்க்' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.


   கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவையாக, தகவல் தொடர்பு வசதி தான். ஆனால், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்கள், 'சார்ஜ்' இல்லாமல் செயல் இழந்து விட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

   திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில் ஒரு குழுவை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் 20 சதவீத சார்ஜ் ஏற்றும் எமர்ஜென்சி பவர் பேங்க்குகளை உருவாக்கி உள்ளனர்.


   கடந்த சனிக்கிழமை, இந்த பவர் பேங்க்குகளை ஹெலிகாப்டர்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் வீசியுள்ளனர். அவற்றை மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் இன்ஜி., மாணவர்கள் செய்த உதவியை கேரள மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். முதல்கட்டமாக, 100 பவர் பேங்க்குகளை மாணவர்கள் தயாரித்தனர். மேலும், 200 பவர் பேங்க்குகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment