மக்கள் சக்தி இயக்கம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் ஊராட்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக 12.8.2018 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் முருங்கை ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் இன்று ஆயிரத்துக்கும் ஏற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டன. முருங்கை ஊராட்சியை சேர்ந்த சிவபிரகாஷ், திவ்யா, ராஜேஸ்வரி, சந்தியா, பவித்ரா, கோமதி, சங்கீதா, நித்தியா, ஆஷா, மலர், தீபிகா, உதயா, கோகுல், பிரகாஷ், கீர்த்திகா, நிவேதிதா குழந்தைகளுடன் இணைந்து வடக்கு மண்டல பொதுச் செயலாளர் தேவநாதன், ஒன்றிய இணைச்செயலாளர் தேவராஜன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சரத்பாபு, ஆனந்தன், ராமன், விஜயபாஸ்கர், கிளை செயலாளர்கள் தொழுப்பேடு கோம்பையன், களத்தூர் மாரி, சிறு பேர் பாண்டி பாரதி சேகர் ஆகியோருடன் கிராம பெரியவர் இராமானுஜம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறிய பிள்ளைகள் கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. மேலும் அதில் வந்த சில சிறுமிகள் வேப்ப மரத்தின் விதைகளை சேகரித்து அதையும் விதைத்தது சிறப்பு எனக் கூறலாம். கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் உள்ள இளைஞர்களே இயற்கை வளங்களை பாதுகாக்க அவரவர் கிராமங்களில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் விரும்புகிறது. இந்த நிகழ்ச்சியை முருங்கை திரு ஆனந்தன் அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் அவருக்கு பாராட்டுக்கள்.

No comments:
Post a Comment