வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஒரு லாரி மணல் ரூ.35 ஆயிரம் வெள்ளத்தால் மேலும் உயரும்?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, August 19, 2018

ஒரு லாரி மணல் ரூ.35 ஆயிரம் வெள்ளத்தால் மேலும் உயரும்?



ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மணல் தட்டுப்பாடு அதிகரித்து, ஒரு லாரி மணல், 35 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. தொடர் வெள்ளத்தால், இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.கடந்த மாதம் வரை, திருச்சியில் மட்டுமே அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அங்கிருந்து, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் மணல் விற்பனை செய்யப்பட்டது. 


 

ஆன் - லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு, 40 நாட்களுக்கு பின், எஸ்.எம்.எஸ்., மூலம், லாரியுடன் வந்து மணலை பெற்றுச் செல்லுமாறு குறுந்தகவல் அனுப்பப்படும்.அந்த, எஸ்.எம்.எஸ்., தகவலை திருச்சி மணல் விற்பனை யார்டில் காண்பித்து, லாரிகளில் மணலை எடுத்து வர வேண்டும். தினமும், 150 - 200 லாரிகளுக்கு மட்டுமே மணல் கிடைக்கும். ஆனால், ஆன் - லைனில் தினமும், 10 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்து காத்திருப்பர். பதிவு செய்து குறைந்தபட்சம், 45 நாட்களுக்கு பிறகே கிடைக்கும். 2 யூனிட் அளவு கொண்ட ஒரு லாரி மணல், 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.இதனால், மணல் வியாபாரத்தை நம்பி இருந்த பலரும் ஏமாற்றமடைந்து, மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.
 

 மணல் தேவையை கருத்தில் கொண்டு, மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை கிராமத்தில் அரசு மணல் குவாரிக்கு அனுமதிஅளிக்கப்பட்டது. இங்கிருந்து, சிவகங்கை அருகே உள்ள காயாங்குளம் கிராமத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து, ஆன் - லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
 

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் மணல் லோடு கேட்டு, ஆன் - லைனில் முன்பதிவு செய்ய துவங்கினர்.ஆனால், கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக குவாரி திறக்கப்படவில்லை. தற்போது வைகை தவிர மற்ற அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் செயல்பட்டு வந்த, மணல் குவாரியும் மூடப்பட்டுவிட்டது.வைகை அணையின் நீர்மட்டம், 65 அடியை கடந்து விட்டதால், இன்று முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தெ.புதுக்கோட்டை குவாரியும் செயல்பட வாய்ப்பில்லை. ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த மணல் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்பதால் மணல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.சிவகங்கை மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர், செந்தில் கூறியதாவது:இதுவரை ஒரு லாரி மணல்,25 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. ஆவணி பிறந்து கட்டடப்பணிகள் துவங்கும் நிலையில் அரசு குவாரிகளில் மணல் இல்லை. இருக்கும் மணல் லோடு, 35 ஆயிரத்திற்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment