வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கல்யாணத்திற்கு முன்னாடியே அந்த விஷயம்?., கல்யாணத்திற்கு அப்புறம் எந்த ஆணுடனும்.! பெற்றோரே குடிசை கட்டி தரும் "காதல் குடிசை".!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

கல்யாணத்திற்கு முன்னாடியே அந்த விஷயம்?., கல்யாணத்திற்கு அப்புறம் எந்த ஆணுடனும்.! பெற்றோரே குடிசை கட்டி தரும் "காதல் குடிசை".!!




Pages


ஆசிய கண்டத்தில் உள்ள கம்போடியா நாட்டில் கெருங் என்ற சமூகத்தை சார்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் காடுகளில் இயற்கையை எந்த விதமான கெடுதலுக்கும் உட்படுத்தாமல்., இயற்கையாகவே இருப்பிடத்தை அமைத்து., இயற்கையான உணவுகளை சாப்பிட்டு மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.


அந்த வகையில்., இயற்கையாகவே வாழ்ந்து வரும் இந்த மக்களிடம் கலவியில் புதுமையான பழக்கம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது. அக்கிராமத்தில் பெண் குழந்தை பிறந்து., தனது பருவ வயதை எட்டியவுடன் பெண் குழந்தையின் பெற்றோர்களே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் பெண்ணின் வருங்கால துணையை தேடுவதற்கு மூங்கிலால் ஆன குடில் ஒன்றை அமைத்து தருகின்றனர்.


இந்த குடிலிற்கு காதல் குடிசை என்று பெயர் வைத்து அழைக்கப்படும் நிலையில்., அந்த குடிலில் பெண் எத்தனை நாட்கள் தங்கியிருக்கும் விரும்ம்புகிறாரோ? அத்தனை நாட்களும் அந்த பெண் அந்த குடிலில் இருக்கலாம். அவ்வாறு அந்த குடிலில் இருக்கும் சமயத்தில் அந்த கிராமத்தில் இருக்கும் ஆண்களை அழைத்து அவர்களிடம் பேசி புரிந்து கொள்கின்றனர்.


அவ்வாறு குடிலுக்கு வரும் ஆணிடம் பேசி அவர்கள் குறித்த நல்லெண்ணம் அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். அந்த மக்களின் வாழ்வியல் சூழ்நிலையை பொறுத்த அளவில் திருமணத்திற்கு முன்னர் தாம்பத்தியத்தில் எந்த விதமான பிரச்சனையும் அவர்களுக்கு இல்லை.


பருவ வயதுடைய பெண்கள் தங்கள் விரும்பும் ஆண் நபர்களை குடிலுக்கு அழைத்து சென்று அவர்களிடம் பேசுவது வழக்கம். இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு விருப்பத்துடன் தாம்பத்தியத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு குடிலில் இருக்கும் பெண்களுக்கு உணவு அவர்களின் இல்லத்தில் இருந்து வழங்கப்படும். அவ்வப்போது பெண்ணின் தாயார் தனது மகளை காணுவதற்கு சென்று வருகிறார்.


தனக்கு பொருத்தமான துணையை தேர்ந்தெடுக்கும் பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்து பின்னர் திருமணத்தை முடித்து கொள்கின்றனர்.
இதன் மூலமாக இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு துணையை தேர்ந்தெடுப்பதால் அவர்களுக்கு திருமணத்திற்கு பின்னர் ஏற்படும் மன கசப்புகள் குறைகிறது என்று தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாது பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விலக்கம் ஏற்ப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர்.


இந்த நடவடிக்கைகளுக்கு ஏற்றார் போலவே இந்த கிராமத்தில் இருக்கும் ஆண்கள் பெண்களின் மீது மதிப்பு மற்றும் மரியாதையை அதிகளவில் வைத்துள்ளனர். தங்களின் சிறு வயதில் இருந்தே பெண்களிடம் எவ்வாறு நன்மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து ஆண்களுக்கும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அவ்வாறு திருமணத்திற்கு முன்னர் தாம்பத்தியம் ஏற்பட்டு பெண் கருவுற்றால் அந்த குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களே வளர்த்து வருகின்றனர்.


திருமணத்திற்கு முன்னர் குழந்தைகளை பெற்றெடுத்து பின்னர் ஏற்பட்ட மன கசப்பால் பிரிந்தாலும்., அந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு பிற ஆண்கள் தயங்குவதும் இல்லை. அந்த குழந்தையும் திருமண தம்பதிகளின் குழந்தையாக கருதி அவர்கள் வளர்த்து வருகின்றனர். எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் இயற்கையுடன் கூடிய நல்வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்ச்சியோடு இருந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment