வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பள்ளி மாணவிகள் கர்ப்பமாவதை தடுக்க மாணவர்களுக்கு இலவச காண்டம்!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

பள்ளி மாணவிகள் கர்ப்பமாவதை தடுக்க மாணவர்களுக்கு இலவச காண்டம்!!

பள்ளி மாணவிகள் கர்ப்பமாவதை தடுக்க மாணவர்களுக்கு இலவச காண்டம் வழங்கும் அரசு பள்ளி...!



தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவிகள் திடீரென கர்ப்பமாகும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. பள்ளியில் இரு பாலர் படிப்பதால் அவர்களுக்குள் பாலியல் உறவு குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இளம் வயதிலேயே யாருக்கும் தெரியாமல் உடலுறவில் ஈடுபடுவதை பள்ளி நிர்வாகம் கண்டறிந்துள்ளது.


இந்நிலையில், இதைத்தடுக்க பள்ளி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. குறிப்பாக மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகத்தில் பேசக்கூடாது. ஒன்றாகச் சேர்ந்துசெல்லக்கூடாது. என பல்வேறு சட்டம் போட்டும் இதைத் தடுக்க முடியவில்லை.


பள்ளி வளாகத்திற்குள் இதைக் கடைப் பிடித்தாலும், பள்ளி வளாகத்திற்கு வெளியே நடக்கும் சம்பவங்களைப் பள்ளி நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து பள்ளி மாணவிகள் கர்ப்பமாவதும், அதைப் பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் சேர்ந்து கலைப்பதும் என இது தொடர்ந்து கொண்டே இருந்தது.


இறுதியாக வேறு வழியின்றி பள்ளி நிர்வாகம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தினமும் இலவசமாகக் காண்டம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இடங்களில் காண்டம் நிறைந்த பெட்டிகளை வைத்து அதை மாணவர்கள் எடுத்து பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.


மாணவர்கள், மாணவிகளின் முறையற்ற இந்த பாலியல் உறவிற்குப் பள்ளி நிர்வாகமே துணை நிற்பது போல இந்த நடவடிக்கை இருப்பதாகவும், மாணவர்களுக்கு பாலியல் குறித்த அறிவை விதைக்காமல் இதைச் செய்வது அவர்களுக்குத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment