வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 16 வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பத்துடன் உறவு கொண்டால் விலக்கு- உயர்நீதிமன்றம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

16 வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பத்துடன் உறவு கொண்டால் விலக்கு- உயர்நீதிமன்றம்



தமிழகத்தில் 16-வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கை எடுக்காமல், விலக்கு அளிப்பது தொடர்பாக திருத்தம் கொண்டு வர வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.


நாமக்கல் மாவட்ட இளைஞர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.


இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் நாமக்கல் மகளிர் நீதிமன்றம், கடந்த ஆண்டு அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் அந்த நபர் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


அப்போது இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் நடந்தது. கடத்தப்பட்டதாக கூறப்படும் மைனர் பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் கீழமை நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ளாமல், எனக்கு தண்டனை விதித்துள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.


அதன் பின் இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இளைஞர் மீதான குற்றச் சாட்டுகளை போலிசார் சரிவர நிரூபிக்கவில்லை என்று கூறி, அவரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. அதுமட்டுமின்றி நீதிபதி தனது உத்தரவில் மேலும் கூறுகையில், 16 வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பத்துடன் உறவுகொண்டால், அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக, அந்த சட்டத்தில் தமிழக அரசு உரிய திருத்தம் செய்ய வேண்டும்.


ஏனெனில் போக்ஸோ சட்டம் தொடர்பாக போதுமான விழிப்புணர்வு முயற்சிகள் எடுத்தபோதும் குற்றங்கள் குறையவில்லை. இந்த குற்றங்களை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர் இளம் பருவம் தொடர்பான திரைப்படங்களை திரையிடும் போது, போக்ஸோ சட்டம் குறித்த எச்சரிக்கையையும் அதில் இடம்பெறச் செய்ய வேண்டும்.


18 வயதுக்கு கீழ் உள்ள ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டால்கூட, போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், சம்பந் தப்பட்ட ஆணுக்கு 7 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதை தடுக்க, போக்ஸோ சட்டத்தில் சிறுமிகளுக்கான வயது வரம்பை 16 வயதாக குறைக்கலாம்.


சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்களை ஆராய உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க..? கருத்தை பதிவிடுங்கள்!



http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html


Pages

No comments:

Post a Comment