வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ரூ.75 இலட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆன்மீககுரு பங்காரு அடிகளார் | Melmaruvathur New Year Celebration
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 01, 2020

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ரூ.75 இலட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆன்மீககுரு பங்காரு அடிகளார் | Melmaruvathur New Year Celebration


2020 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு சிறப்பு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவினை முன்னிட்டு சித்தர் பீடம் முழுவதும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
மேலும், தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் அதிக பக்தர்களை கொண்ட பெருமைக்குரியதும் ஆன்மீக நம்பிகைக்கும் உரிய ஸ்தலமாக விளங்குகிறது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம். இரவு 11 மணிக்கு ஆங்கில புத்தாண்டை வரவேற்க வழிபாடுகளை மேற்கொண்டு காலை சுமார் 05.00 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூசைகள் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் அவர்கள் துவக்கத்துடன் நடைபெற்றது. 
மேலும், ஆன்மீக இயக்கத் துணைத்தலைவர்  கோ.ப செந்தில்குமார் தலைமையில் காலை 06.30 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. விழாவின் தொடர்ச்சியாக காலை 09.30 மணியளவில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு பக்தர்கர் பாத பூசைகளை நடத்தி வரவேற்றனர். பின்னர் இயக்கத் துணைத்தலைர் ஶ்ரீதேவி இரமேஷ் அன்னதானத்தை துவக்கி வைத்தார். 
காலை 11.30 மணியளவில் கர்நாடக மாநில கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்ராஜ், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சக்தி கே.எஸ்.ஈஸ்வரப்பா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் மடிக்கணினி, தையல் இயந்திரம், மருத்துவ நெபுலைஸர் கருவிகள், எலக்ட்ரிக்கல் பழுதுபார்க்கும் கருவிகள், செயற்கை கால்கள், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதனை கருவிகள் என 113 பயனாளர்களுக்கு சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. 
மேலும் 3 பேருக்கு பயணிகள் ஆட்டோ வழங்கப்பட்டன. மேலும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பள்ளி போன்ற பல்வேறு அமைப்புகளுக்கு 26 இலட்சம் நன்கொடையாகவும் மேல்மருவத்தூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கு 1 பேருந்தும் என 75 இலட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
இதனைத் தொடர்ந்து ஆன்மீக இயக்கத்தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார்  விழாப் பேருரை ஆற்றினார். ஆன்மீக இயக்கத் தலைவர் உமாதேவி, மோனலட்சுமி ஆகியோர் விழாவினை சிறப்பித்தனர். விழா ஏர்பாடுகளை கர்நாடக மாநில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர்கள் இராஜகோபால், உதயகுமார் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment